குறிஞ்சி மலரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாஅழகே உன்னை ஆராதிக்கிறேன்

Kurinji Malaril Song Lyrics in Tamil


BGM

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…

ஆண் : ஒரு மாலையிடவும் சேலை தொடவும்…
வேளை பிறந்தாலும்…
அந்தி மாலை பொழுதில் லீலை புரியும்…
ஆசை பிறக்காதோ…

ஆண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு…
மேனி மீது எழுதும் மடல்தான் உறவு…
தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்…

ஆண் : அதுவரையில் நான்…
அதுவரையில் நான் அனலில் மெழுகோ…
அலைக் கடலில்தான் அலையும் படகோ…

பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்…
வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன…
என்னிடம் நாடியதென்ன…

பெண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்…
வேளை பிறக்காதோ…
அந்த வேளை வரையில் காளை உனது…
உள்ளம் பொறுக்காதோ…

BGM

ஆண் : காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க…
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க…
இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே…

பெண் : பிறர் அறியாமல்…
பிறர் அறியாமல் பழகும் போது…
பயம் அறியாத இதயம் ஏது…

BGM

பெண் : வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்…
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்…
உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்…

ஆண் : சுதி விலகாமல் இணையும் நேரம்…
சுவைக் குறையாமல் இருக்கும் கீதம்…

பெண் : குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன…
ஆண் : பூவிதழ் மூடியதென்ன…
பெண் : என்னிடம் நாடியதென்ன…

ஆண் : ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்…
வேளை பிறந்தாலும்…

பெண் : அந்த வேளை வரையில் காளை உனது…
உள்ளம் பொறுக்காதோ…


Notes : Kurinji Malaril Song Lyrics in Tamil. This Song from Azhage Unnai Aarathikkiren (1979). Song Lyrics penned by Vaali. குறிஞ்சி மலரில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading