ஓங்கார‌ நாதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தவசீலன்கே. வீரமணிவீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Omkara Natham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்…
தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம்…
ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்…
தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம்…

—BGM—

ஆண் : ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம்…
அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம்…
பனிதூவும் மாதம் மணிமாலை போடும்…
மனம் யாவும் பாடும் தேவா உன் கோஷம்…

ஆண் : ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்…
தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம்…

—BGM—

ஆண் : பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும்…
படியேறும் போதே நலம் கோடி சேரும்…
மலையெங்கும் வீசும் அபிஷேக‌ வாசம்…
மனைவாழச் செய்யும் மணிகண்ட‌ கோஷம்…

ஆண் : ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்…
தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம்…

—BGM—

ஆண் : காலங்கள் தோறும் உன் நாமம் பாடும்…
மனமொன்று போதும் வேறென்ன‌ வேண்டும்…
இல்லங்கள் தோறும் நீதானே தெய்வம்…
என்றென்றும் சொல்வோம் சாஸ்தா உன் சரணம்…

ஆண் : ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்…
தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம்…
ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்…
தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம்…
சாஸ்தா உன் நாமம்…
சாஸ்தா உன் நாமம்…


Notes : Omkara Natham Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Thavaseelan. ஓங்கார‌ நாதம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading