mainave-mainave-song-lyrics

மைனாவே மைனாவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஉன்னி மேனன் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்வானத்தைப் போல

Mainave Mainave Song Lyrics in Tamil


BGM

ஆண் : மைனாவே மைனாவே…
இது என்ன மாயம்…
மழை இல்லை நனைகின்றேன்…
இது என்ன மாயம்…

ஆண் : நேற்று பார்த்த பார்வையோ…
பாலை வார்த்து போனது…
இன்று பார்த்த பார்வையோ…
மாலை மாற்றி போனது…

ஆண் : காதல் என்பதா…
இதை மாயம் என்பதா…
காதல் என்பதா…
இதை மாயம் என்பதா…

பெண் : மைனாவே மைனாவே…
இது என்ன மாயம்…
மழை இல்லை நனைகின்றேன்…
இது என்ன மாயம்…

BGM

ஆண் : நதி கரை மணல் மீது…
உன் பெயர் நான் எழுத…
மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன…

பெண் : மூங்கில் காட்டில் உன் பேரை…
சொல்லி பார்த்தேன் சுகமாக…
மூங்கில்கள் குழலான மாயம் என்ன…

ஆண் : நூலும் இல்லை காற்றும் இல்லை…
வானில் பறக்கும் பட்டம் ஆனேன்…

பெண் : இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன…

ஆண் : மைனாவே மைனாவே…
இது என்ன மாயம்…

பெண் : மழை இல்லை நனைகின்றேன்…
இது என்ன மாயம்…

BGM

பெண் : அம்புவிடும் ஒரு வேடன்…
கண்கள் பட்டு துடிக்கின்றான்…
மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன…

ஆண் : பஞ்சை போல இருக்கின்றாய்…
தீயை பற்ற வைக்கின்றாய்…
மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன…

பெண் : மேகம் ஒன்று வலையை வீச…
வானம் வந்து சிறையில் சிக்க…

ஆண் : இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன…

பெண் : மைனாவே மைனாவே…
இது என்ன மாயம்…

ஆண் : மழை இல்லை நனைகின்றேன்…
இது என்ன மாயம்…

பெண் : நேற்று பார்த்த பார்வையோ…
பாலை வார்த்து போனது…

ஆண் : இன்று பார்த்த பார்வையோ…
மாலை மாற்றி போனது…

பெண் : காதல் என்பதா…
இதை மாயம் என்பதா…

ஆண் : காதல் என்பதா…
இதை மாயம் என்பதா…

பெண் : மைனாவே மைனாவே…
இது என்ன மாயம்…

ஆண் : மழை இல்லை நனைகின்றேன்…
இது என்ன மாயம்…

BGM


Notes : Mainave Mainave Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by Viveka. மைனாவே மைனாவே பாடல் வரிகள்.