மைனாவே மைனாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & சாதனா சர்கம்வித்யாசாகர்தித்திக்குதே

Mainaave Mainaave Song Lyrics in Tamil


BGM

ஆண் : மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா… ஹே…

ஆண் : மைனாவே மைனாவே…
என் கண்கள் பூமியில் தேடிய…
தேடல் நீதானா…

ஆண் : விண்மீனாய் தொலைந்த மகள்…
வென் நிலவாய் வந்தாளா…
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா…

ஆண் : பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்…
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா…

ஆண் : மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா…

ஆண் : மைனாவே மைனாவே…
என் கண்கள் பூமியில் தேடிய…
தேடல் நீதானா…

BGM

ஆண் : நீ போன காலம் தொட்டு…
என் வாழ்வில் பகலே இல்லை…
இருளோடு உன்னை தேடி இளைத்துவிட்டேன்…

பெண் : திசைக்கொன்றாய் தேடி செல்ல…
விழி நான்கு இல்லை என்று…
கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்துவிட்டேன்…

ஆண் : பிரிந்தோம் அன்று துளியாக…
இணைந்தோம் இன்று நதியாக…

பெண் : நீரின் தாகம் நீரால் தீர்ந்தது…

ஆண் : ஆஆ… ஆஆ… மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா…

பெண் : மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா…

BGM

பெண் : சில்லென்ற முத்தம் ஒன்று…
செல் எல்லாம் நனையும் போது…
உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே…

ஆண் : தேரோடு பூவனம் ஒன்று…
வாரோடு சரியும் போது…
அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே…

பெண் : தேகம் ரெண்டும் பிரியாதா…
ஜீவன் எரியும் சுடராக…

ஆண் : முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம்…

பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா…

பெண் : ஆஆ… ஆஆ… மைனாவே மைனாவே…
என் கண்கள் பூமியில் தேடிய…
தேடல் நீதானா…

ஆண் : விண்மீனாய் தொலைந்த மகள்…
வென் நிலவாய் வந்தாளா…
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளா…

ஆண் : பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்…
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா…

BGM


Notes : Mainaave Mainaave Song Lyrics in Tamil. This Song from Thithikudhe (2003). Song Lyrics penned by Vairamuthu. மைனாவே மைனாவே பாடல் வரிகள்.


Scroll to Top