நீராடும் கண்களோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நூர்மதிதாசன்நாகூர் இ.எம்.ஹனிஃபாகே.எஸ்.ஜெய்சாஇஸ்லாமிய பக்தி பாடல்கள்

Neeradum Kankalodu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீராடும் கண்களோடு…
நெஞ்சம் நிறை பாசத்தோடு…
நீராடும் கண்களோடு…
நெஞ்சம் நிறை பாசத்தோடு…

ஆண் : மாறாத ஈமானோடு யாரசூலல்லாஹ்…
நான் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…
மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…

—BGM—

ஆண் : வான்மறையை நெஞ்சில் ஏந்தி…
வாய்மையினை வாழ்வில் ஏந்தி…
தீன்குலத்து நாயகமே யா ரசூலல்லாஹ்…
உங்கள் திருமுகத்தை காண வேண்டும் யா ரசூலல்லாஹ்…
திருமுகத்தை காண வேண்டும் யா ரசூலல்லாஹ்…

—BGM—

ஆண் : வாழும்நெறி வகுத்தளித்து…
வாழ்ந்துகாட்டி விளங்கவைத்து…
வானம் சென்று இறையை கண்ட யா ரசூலல்லாஹ்…
உங்கள் வாகைதனை பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…
வாகைதனை பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…

—BGM—

ஆண் : தேன்சுரக்கும் சுவர்க்கலோகம்…
தூயவர்கள் வாழும் இல்லம்…
தேடிடுவேன் நான் தங்களை யா ரசூலல்லாஹ்…
உங்கள் தேனியிதழால் அழைக்க வேண்டும் யா ரசூலல்லாஹ்…
தேனியிதழால் அழைக்க வேண்டும் யா ரசூலல்லாஹ்…

—BGM—

ஆண் : அகிலம் தோன்ற ஜீவனாகி…
ஆண்டவனின் தூதராகி…
புகழ் உலகில் ஆட்சி செய்யும் யா ரசூலல்லாஹ்…
உங்கள் புன்னகையில் நான் லயிப்பேன் யா ரசூலல்லாஹ்…
புன்னகையில் நான் லயிப்பேன் யா ரசூலல்லாஹ்…

—BGM—

ஆண் : பாதை மாறிச் சென்றிடாமல்…
பாதுகாத்து இங்கே எம்மை…
நீதி கூறும் மறுமை நாளில் யா ரசூலல்லாஹ்…
நான் நல்லோருடன் வாழ வேண்டும் யா ரசூலல்லாஹ்…
நல்லோருடன் வாழ வேண்டும் யா ரசூலல்லாஹ்…

ஆண் : நீராடும் கண்களோடு…
நெஞ்சம் நிறை பாசத்தோடு…
நீராடும் கண்களோடு…
நெஞ்சம் நிறை பாசத்தோடு…

ஆண் : மாறாத ஈமானோடு யாரசூலல்லாஹ்…
நான் மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…
மனம் உருகி பாடுகின்றேன் யா ரசூலல்லாஹ்…


Notes : Neeradum Kankalodu Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs . Song Lyrics penned by Noormathidasan. நீராடும் கண்களோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading