இறைவனிடம் கையேந்துங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஆர்.அப்துல் சலாம்நாகூர் இ.எம்.ஹனிஃபாஎம். முத்துஇஸ்லாமிய பக்தி பாடல்கள்

Iraivan Idam Kai Yenthungal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்…
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை…

ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…

BGM

ஆண் : இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்…
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்…
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்…
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்…

ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…

BGM

ஆண் : ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்…
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்…
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்…

ஆண் : அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்…
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்…
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்…
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்…

ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…

BGM

ஆண் : தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்…
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்…
வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்…
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்…

ஆண் : அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்…
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்…
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்…
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்…

ஆண் : இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…


Notes : Iraivan Idam Kai Yenthungal Song Lyrics in Tamil. This Song from Islamic Devotional Songs . Song Lyrics penned by R.Abdul Salam. இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top