ஈராக் யுத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉதித் நாராயண் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்தித்திக்குதே

Iraq Yuthham Song Lyrics in Tamil


ஆண் : மருஹபா…

—BGM—

பெண் : ஈராக் யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க…
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க…

ஆண் : ஈராக் யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க…
பெண் : அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க…

ஆண் : ஹே… எண்ணை வயல் எரிஞ்சு போச்சு இங்க…
பெண் : என் எண்ணை வயல் எரியுதடா இங்க …

ஆண் : கன்னி வெடி அணைஞ்சு போச்சு இங்க…
பெண் : என் கன்னி வெடி வெடிக்குதடா இங்க…

பெண் : ஈராக் யுத்தம்…

—BGM—

ஆண் : ஈராக் யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க…
பெண் : அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க…

—BGM—

ஆண் : மருஹபா…

—BGM—

ஆண் : ஹே… ஏவி விட்ட ஏவுகணை போதும் போதும் போதுமென…
ஏதேதோ எரிஞ்சு போச்சு இங்க…

பெண் : எங்கும் ஏவாத ஏவுகணை வேணும் வேணும் வேணுமென…
என் மார்பு துடிக்குது இங்க…

ஆண் : வட்டமிட்டு வட்டமிட்டு வல்லரசு குண்டு போட்டு…
கட்டடங்கள் உடைஞ்சு போச்சு அங்க…

பெண் : நீ திட்டமிட்டு திட்டமிட்டு என் மனசை துண்டு போட…
கட்டழகு கழண்டுபோச்சு இங்க…

ஆண் : ஊருக்குள்ள சேதம் வருமே…
அந்த யுத்தம் யுத்தம் யுத்தம் எதற்கு… ஹோய்…

பெண் : என்னை கொஞ்சம் சேதபடுத்து…
நீ நித்தம் நித்தம் யுத்தம் நடத்து…

ஆண் : ஹே… எண்ணை வயல் எரிஞ்சு போச்சு இங்க…
பெண் : என் எண்ணை வயல் எரியுதடா இங்க…

ஆண் : கன்னி வெடி அணைஞ்சு போச்சு இங்க…
பெண் : என் கன்னி வெடி வெடிக்குதடா இங்க…

பெண் : ஈராக் யுத்தம்…
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க…

—BGM—

ஆண் : பீரங்கியும் துப்பாக்கியும் பெருமூச்சு விட்டு விட்டு…
பாலை வனம் கருகி போச்சு அங்க…

பெண் : பேரழகா உன்னை எண்ணி பெருமூச்சு விட்டு…
விட்டு சோலைவனம் கருத்து போச்சு இங்க…

ஆண் : வான்வழி தரைவழி ரெண்டு பக்கம் தாக்க பட்டு…
பக்தாட் விழுந்துருச்சு அங்க…

பெண் : கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள ரெண்டு பக்கம் தாக்க பட்டு…
கண்ணு முழி பிதுங்கிருச்சு இங்க…

ஆண் : அன்னம் தண்ணி ஏதும் இல்லாமே…
அங்கே ஆர்பாட்டம் நடக்கிறதே…

பெண் : அன்னம் தண்ணி ஏதும் செல்லாம…
என் ஆவி இங்கு துடிக்கிறதே…

ஆண் : ஹே… எண்ணை வயல் எரிஞ்சு போச்சு இங்க…
பெண் : என் எண்ணை வயல் எரியுதடா இங்க…

ஆண் : கன்னி வெடி அணைஞ்சு போச்சு இங்க…
பெண் : என் கன்னி வெடி வெடிக்குதடா இங்க…

ஆண் : ஈராக் யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க…
பெண் : அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிருச்சு இங்க…

ஆண் : ஹே… எண்ணை வயல் எரிஞ்சு போச்சு இங்க…
பெண் : என் எண்ணை வயல் எரியுதடா இங்க…

ஆண் : கன்னி வெடி அணைஞ்சு போச்சு இங்க…
பெண் : என் கன்னி வெடி வெடிக்குதடா இங்க…

பெண் : ஈராக் யுத்தம்…


Notes : Iraq Yuthham Song Lyrics in Tamil. This Song from Thithikudhe (2003). Song Lyrics penned by Vairamuthu. ஈராக் யுத்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading