Category Archives: வேட்டைக்காரன்

புலி உறுமுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனந்து & மகேஷ் விநாயக்ரம்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Puli Urumudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : புலி உறுமுது புலி உறுமுது…
இடி இடிக்குது இடி இடிக்குது…
கொடிப் பறக்குது கொடிப் பறக்குது…
வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

ஆண் : கொல நடுங்குது கொல நடுங்குது…
துடித்துடிக்குது துடித்துடிக்குது…
நெலகொலைக்குது நெலகொலைக்குது…
வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

ஆண் : பட்டக்கத்தி பளபளக்க…
பட்டித்தொட்டிக் கலகலக்க…
பறந்து வர்றான் வேட்டைக்காரன்…
பாமரனின் கூட்டுக்காரன்…

ஆண் : நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு…
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு…
வர்றான் பாரு வேட்டைக்காரன்…

ஆண் : புலி உறுமுது புலி உறுமுது…
குழு : இடி இடிக்குது இடி இடிக்குது…
ஆண் : கொடிப் பறக்குது கொடிப் பறக்குது…
குழு : வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

ஆண் : கொல நடுங்குது கொல நடுங்குது…
குழு : துடித்துடிக்குது துடித்துடிக்குது…
ஆண் : நெலகொலைக்குது நெலகொலைக்குது…
குழு : வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

BGM

ஆண் : யார் இவன் யார் இவன் யார் இவன்…
அந்த ஐய்யனாா் ஆயுதம்போல் கூர் இவன்…
இருபது நகங்களும் கழுகுடா…
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா…

ஆண் : அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்…
இவன் அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான்…
இவனோட நியாயம் தனி நியாயம்…
அட இவனால அடங்கும் அநியாயம்…

ஆண் : போடு அடியப்போடு போடு அடியப்போடு…
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா…
போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா…

ஆண் : புலி உறுமுது புலி உறுமுது…
குழு : இடி இடிக்குது இடி இடிக்குது…
ஆண் : கொடிப் பறக்குது கொடிப் பறக்குது…
குழு : வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

ஆண் : கொல நடுங்குது கொல நடுங்குது…
குழு : துடித்துடிக்குது துடித்துடிக்குது…
ஆண் : நெலகொலைக்குது நெலகொலைக்குது…
குழு : வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

BGM

ஆண் : யார் இவன் யார் இவன் யார் இவன்…
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்…
சினத்துக்குப் பிறந்திட்ட சிவனடா…
அட இவனுக்கு இணைதான் எவனடா…

ஆண் : இவனுக்கு இல்லடா கடிவாளம்…
இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்…
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்…
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்…

ஆண் : போடு அடியப்போடு போடு அடியப்போடு…
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு னா…
போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா…

ஆண் : புலி உறுமுது புலி உறுமுது…
குழு : இடி இடிக்குது இடி இடிக்குது…
ஆண் : கொடிப் பறக்குது கொடிப் பறக்குது…
குழு : வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

ஆண் : கொல நடுங்குது கொல நடுங்குது…
குழு : துடித்துடிக்குது துடித்துடிக்குது…
ஆண் : நெலகொலைக்குது நெலகொலைக்குது…
குழு : வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

ஆண் : பட்டக்கத்தி பளபளக்க…
பட்டித்தொட்டிக் கலகலக்க…
பறந்து வர்றான் வேட்டைக்காரன்…
பாமரனின் கூட்டுக்காரன்…

ஆண் : நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு…
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு…
வர்றான் பாரு வேட்டைக்காரன்…

ஆண் : புலி உறுமுது புலி உறுமுது…
குழு : இடி இடிக்குது இடி இடிக்குது…
ஆண் : கொடிப் பறக்குது கொடிப் பறக்குது…
குழு : வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

ஆண் : கொல நடுங்குது கொல நடுங்குது…
குழு : துடித்துடிக்குது துடித்துடிக்குது…
ஆண் : நெலகொலைக்குது நெலகொலைக்குது…
குழு : வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…

BGM


Notes : Puli Urumudhu Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Kabilan. புலி உறுமுது பாடல் வரிகள்.


நான் அடிச்சா தாங்கமாட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Naan Adicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் புடிச்சா உடும்பு புடி…
நான் சிரிச்சா வான வெடி…
நான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ அடி…

குழு : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : வாழு வாழு வாழ விடு…
வாழும் போதே வானைத் தொடு…
வம்பு பண்ணா வாளை எடு…
வணங்கி நின்னா தோள கொடு…

ஆண் : வாழு வாழு வாழ விடு…
வாழும் போதே வானைத் தொடு…
வம்பு பண்ணா வாளை எடு…
வணங்கி நின்னா தோள கொடு…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

குழு : ஏ மை ராசா…
வா நீ க்ளோஸ்ஸா…
ஆடு என் கூட வில்லேஜ் சல்சா…
சல்சா சல்சா ச ச ச ச ச…
ஜல்சா ஜல்சா ஜ ஜ ஜ ஜ ஜ…
ஆண் : என்னடி பீட்டரு…

ஆண் : உணவு உடை இருப்பிடம்…
உழவனுக்கும் கெடைக்கணும்…
அவன் அனுபவிச்ச மிச்சம்தான்…
ஆண்டவனுக்கு படைக்கணும்…

ஆண் : ஆலமர பள்ளிக்கூடம்…
ஆக்ஸ்போர்டா மாறணும்…
நீ தாய் மொழியில் கல்வி கற்று…
தமிழ் நாட்ட உயர்த்தணும்…

ஆண் : வாய் மூடி வாழாதே…
வீண் பேச்சு பேசாதே…

ஆண் : காலம் கடந்து போச்சுதின்னு…
கவலை பட்டு ஏங்காதே…
கனவு ஜெயிக்க வேணுமா…
கண்ணை மூடி தூங்காதே…

ஆண் : குத்துங்கடா குத்து…
என் கூட சேர்ந்து குத்து…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

BGM

ஆண் : வரட்டி தட்டும் செவத்துல…
வேட்பாளர் முகமடா…
காத்திருந்து வோட்டு போட்டு…
கறுத்து போச்சு நகமடா…

ஆண் : புள்ள தூங்குது இடுப்புல…
பூனை தூங்குது அடுப்புல…
நம்ம நாட்டு நடப்புல…
யாரும் அத தடுக்கல…

ஆண் : தாய் பேச்சை மீறாதே…
தீயோர் சொல் கேட்காதே…

ஆண் : ஏதோ நானும் சொல்லிப்புட்டேன்…
ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ…
சொன்னதெல்லாம் உண்மையின்னா…
உன்ன நீயே மாத்திக்கோ…

ஆண் : குத்துங்கடா குத்து…
ஏழுரு கேக்க குத்து…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

ஆண் : நான் படிச்சா உடும்புபுடி…
நான் சிரிச்சா வான வெடி…
நான் பாடும் பாட்டுக்கு தூள் பறை நீ அடி…

ஆண் : நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…

BGM


Notes : Naan Adicha Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Kabilan. நான் அடிச்சா தாங்கமாட்ட பாடல் வரிகள்.


Uchimandai Song Lyrics in Tamil

என் உச்சி மண்டைல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைகிருஷ்ண ஐயர், ஷோபா சேகர், சாருலதா மணி & சக்திஸ்ரீ கோபாலன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Uchimandai Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…

பெண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…

ஆண் : கை தொடும் தூரம் காய்ச்சவளே…
சக்கரையாலே செஞ்சவளே…
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

பெண் : தாவணி தாண்டி பார்த்தவனே…
கண்ணாலே என்னை சாய்ச்சவனே…
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது…

BGM

ஆண் : மியா மியா பூனை…
நான் மீச வச்ச யானை…
கள்ளு கட பான…
நீ மயக்குற மச்சான…

பெண் : வில்லு கட்டு மீச…
என மேல பட்டு கூச…
ஆட்டு குட்டி ஆச…
உன் கிட்ட வந்து பேச…

ஆண் : மந்திரக்காரி மாய மந்திரக்காரி…
காகிதமா நீ இருந்தா…
பேனா போல நான் இருப்பேன்…
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே…

பெண் : உள்ளங்கையா நீ இருந்தா…
ரேகையாக நான் இருப்பேன்…
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ர்ர்…
உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்…
கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்… டர்ர்ர்…

—BGM—

பெண் : அஞ்சு மணி பஸ்சு…
நான் அதவிட்டா மிஸ்சு…
ஒரே ஒரு கிஸ்சு…
நீ ஒத்துகிட்டா எஸ்சு…

ஆண் : கம்மங்கரை காடு…
நீ சுட்டா கருவாடு…
பந்திய நீ போடு…
நான் வரேன் பசியோடு…

பெண் : மந்திரக்காரா மாய மந்திரக்காரா…
ஹே… அப்பாவியா மூஞ்ச வச்சு…
அங்க இங்க கைய வச்சு…
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியேடா…

ஆண் : துப்பாக்கியா மூக்க வச்சு…
தோட்ட போல மூச்ச வச்சு…
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியேடி…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது…

பெண் : என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது டர்ருன்குது…

ஆண் : கை தொடும் தூரம் காய்ச்சவளே…
சக்கரையாலே செஞ்சவளே…
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

பெண் : தாவணி தாண்டி பார்த்தவனே…
கண்ணாலே என்னை சாய்ச்சவனே…
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே…

ஆண் : என் உச்சி மண்டைல சுர்ர்ர்… சுர்ருங்குது…
உன்ன நான் பார்க்கையிலே கிர்ர்ர்… கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே டர்ர்ர்…


Notes : Uchimandai Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Annamalai. என் உச்சி மண்டைல பாடல் வரிகள்.


சின்ன தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகிரிஷ் & சுசித்ராவிஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Chinna Thamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

ஆண் : இதை உண்மை என்பதா…
இல்லை பொய்தான் என்பதா…
என் தேகம் முழுவதும்…
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

பெண் : என் ரோம கால்களோ…
ஒரு பயணம் போகுதே…
உன் ஈர புன்னகை சுடுதே…

பெண் : என் காட்டுப் பாதையில்…
நீ ஒற்றை பூவடா…
உன் வாசம் தாக்கியே…
மலர்ந்தேன் உயிரே…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM

ஆண் : உன் பெயர் கேட்டாலே…
அடி பாறையில் பூ பூக்கும்…
உன் காலடி தீண்டிய…
வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்…

பெண் : உன் தெரு பார்த்தாலே…
என் கண்கள் அலை மோதும்…
உன் வாசல் தேடி…
போக சொல்லி கெஞ்சுது என் பாதம்

ஆண் : என் வாழ்க்கை வரலாற்றில்…
எல்லாமே உன் பக்கங்கள்…

பெண் : உன்னாலேஎன் வீட்டின்…
சுவர் எல்லாம் ஜன்னல்கள்…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM

ஆண் : உன் குரல் கேட்டாலே…
அந்த குயில்களுக்கும் கூசும்…
நீ மூச்சினில் சுவாசித்த…
காற்றுகள் மட்டும் மோட்சத்திலே சேரும்…

பெண் : அனுமதி கேட்காமல்…
உன் கண்கள் என்னை மேயும்…
நான் இத்தனை நாளாய்…
எழுப்பிய கோபுரம் நொடியில் குடைசாயும்…

ஆண் : உன் கைகள் கோர்க்காமல்…
பயணங்கள் கிடையாது…

பெண் : உன்னோடு வந்தாலே…
சாலைகள் முடியாது…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

ஆண் : இதை உண்மை என்பதா…
இல்லை பொய்தான் என்பதா…
என் தேகம் முழுவதும்…
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

பெண் : என் ரோம கால்களோ…
ஒரு பயணம் போகுதே…
உன் ஈர புன்னகை சுடுதே…

பெண் : என் காட்டுப் பாதையில்…
நீ ஒற்றை பூவடா…
உன் வாசம் தாக்கியே…
மலர்ந்தேன் உயிரே…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

BGM


Notes : Chinna Thamarai Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Viveka. சின்ன தாமரை பாடல் வரிகள்.


கரிகாலன் காலப்போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சுர்ச்சித் & சங்கீதா ராஜேஷ்வரன்விஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Karigalan Kala Pola Song Lyrics in Tamil


BGM

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

ஆண் : ஏய்… பருத்தி பூவப்போல…
பதியுது உன் பாதம்…

பெண் : பாதம் இல்ல பாதம்…
இல்ல பச்சரிசி சாதம்…

ஆண் : ஏ… வலம்புரி சங்கைப் போல…
வழுக்குது உன் கழுத்து…

பெண் : கழுத்து இல்ல கழுத்து இல்ல…
கண்ணதாசன் எழுத்து…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : ஏ… உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

BGM

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…

பெண் : ஆஆஆஆ… ஆஆஆஆ…
ஆஆஆஆ… ஆஆ… ஆஆஆ…
ஆஆஆஆ… ஆஆ… ஆஆஆ…

BGM

ஆண் : ஏய்… பால வளைவு போல…
உள்ளதடி மூக்கு…

பெண் : மூக்கு இல்ல மூக்கு இல்ல…
முந்திரி முந்திரி கேக்கு…

ஆண் : ஊதி வச்ச பலூன் போல…
உப்பிருக்கு கன்னம்…

பெண் : கன்னம் இல்ல கன்னம் இல்ல…
வெள்ளி வெள்ளி கிண்ணம்…

ஆண் : மருதாணி கோலம் போட்டு…
மயக்குது தேகம்…

பெண் : தேகம் இல்ல தேகம் இல்ல…
தீ புடிச்ச மேகம்…

ஆண் : மாராப்பு பந்தலில…
மறைச்சு வச்ச சோலை…

பெண் : சோலையில்ல சோலையில்ல…
ஜல்லிக் கட்டு காளை…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ்மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

பெண் : அப் அண்ட் டவுன்…
அப் அண்ட் டவுன்…

BGM

ஆண் : கண்ட உடன் வெட்டுதடி…
கத்திரிக்கோலு கண்ணு…

பெண் : கண்ணு இல்ல கண்ணு இல்ல…
கெறங்கடிக்கிற ஜின்னு…

ஆண் : பத்த வச்ச மத்தாப்பு போல்…
மினுமினுக்குது பல்லு…

பெண் : பல்லு இல்ல பல்லு இல்ல…
பதிச்ச வைரக் கல்லு…

ஆண் : சுருக்கு பைய போல…
இருக்கு இடுப்பு…

பெண் : இடுப்பு இல்ல இடுப்பு இல்ல…
இந்திரன் படைப்பு…

ஆண் : கண்ணு பட போகுதுன்னு…
கன்னத்துல மச்சம்…

பெண் : மச்சம் இல்ல மச்சம் இல்ல…
நீ விட்டு வைச்ச மிச்சம்…

ஆண் : கரிகாலன் காலப்போல…
கருத்திருக்குது குழலு…

பெண் : குழலில்ல குழலில்ல…
தாஜ் மகால் நிழலு…

ஆண் : சேவலோட கொண்ட போல…
செவந்திருக்குது உதடு…

பெண் : உதடில்ல உதடில்ல…
மந்திரிச்ச தகடு…

ஆண் : ஏய்… பருத்தி பூவப்போல…
பதியுது உன் பாதம்…

பெண் : பாதம் இல்ல பாதம் இல்ல…
பச்சரிசி சாதம்…

ஆண் : ஏ… வலம்புரி சங்கைப் போல…
வழுக்குது உன் கழுத்து…

பெண் : கழுத்து இல்ல கழுத்து இல்ல…
கண்ணதாசன் எழுத்து…

BGM

குழு : நனனன நனன நனன…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…
நந்தானே நந்தானே நந்தானே நந்தானே…


Notes : Karigalan Kala Pola Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Kabilan. கரிகாலன் காலப்போல பாடல் வரிகள்.