சின்ன தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகிரிஷ் & சுசித்ராவிஜய் ஆண்டனிவேட்டைக்காரன்

Chinna Thamarai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

ஆண் : இதை உண்மை என்பதா…
இல்லை பொய்தான் என்பதா…
என் தேகம் முழுவதும்…
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

பெண் : என் ரோம கால்களோ…
ஒரு பயணம் போகுதே…
உன் ஈர புன்னகை சுடுதே…

பெண் : என் காட்டுப் பாதையில்…
நீ ஒற்றை பூவடா…
உன் வாசம் தாக்கியே…
மலர்ந்தேன் உயிரே…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

—BGM—

ஆண் : உன் பெயர் கேட்டாலே…
அடி பாறையில் பூ பூக்கும்…
உன் காலடி தீண்டிய…
வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்…

பெண் : உன் தெரு பார்த்தாலே…
என் கண்கள் அலை மோதும்…
உன் வாசல் தேடி…
போக சொல்லி கெஞ்சுது என் பாதம்

ஆண் : என் வாழ்க்கை வரலாற்றில்…
எல்லாமே உன் பக்கங்கள்…

பெண் : உன்னாலேஎன் வீட்டின்…
சுவர் எல்லாம் ஜன்னல்கள்…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

—BGM—

ஆண் : உன் குரல் கேட்டாலே…
அந்த குயில்களுக்கும் கூசும்…
நீ மூச்சினில் சுவாசித்த…
காற்றுகள் மட்டும் மோட்சத்திலே சேரும்…

பெண் : அனுமதி கேட்காமல்…
உன் கண்கள் என்னை மேயும்…
நான் இத்தனை நாளாய்…
எழுப்பிய கோபுரம் நொடியில் குடைசாயும்…

ஆண் : உன் கைகள் கோர்க்காமல்…
பயணங்கள் கிடையாது…

பெண் : உன்னோடு வந்தாலே…
சாலைகள் முடியாது…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

ஆண் : இதை உண்மை என்பதா…
இல்லை பொய்தான் என்பதா…
என் தேகம் முழுவதும்…
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே…

பெண் : என் ரோம கால்களோ…
ஒரு பயணம் போகுதே…
உன் ஈர புன்னகை சுடுதே…

பெண் : என் காட்டுப் பாதையில்…
நீ ஒற்றை பூவடா…
உன் வாசம் தாக்கியே…
மலர்ந்தேன் உயிரே…

ஆண் : ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…

—BGM—


Notes : Chinna Thamarai Song Lyrics in Tamil. This Song from Vettaikaaran (2009). Song Lyrics penned by Viveka. சின்ன தாமரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading