Category Archives: காதல் வைரஸ்

காதல் வைரஸ் – Kadhal Virus (2002)

ஓ காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கிளிண்டன் செரிஜோஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

O Kaadhale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…
ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM

ஆண் : ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…
ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…

BGM

ஆண் : இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்…

ஆண் : வானம் போனில் வாழ்கை இருந்தும்…
அதில் ஓர் நிலவாய் நீ ஏன் இல்லை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : காதலே காதலே…
ஓ காதலே காதலே…
காதலே காதலே…
ஓ காதலே காதலே…

BGM

ஆண் : நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…
நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…

BGM

ஆண் : விழியில் நதியா…
இதுதான் விதியா…
எனைதான் படைத்த இறைவன் சதியா…

ஆண் : வளர்த்தான் உறவை…
வகுத்தான் பிரிவை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM


Notes : O Kaadhale Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. ஓ காதலே பாடல் வரிகள்.


எந்தன் வானின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Yenthen Vanin Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்…
வானம் உள்ளவரை வாழ்க என்றும்…
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை…
வாழ்கவே…

ஆண் : வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்…
வானம் உள்ளவரை வாழ்க என்றும்…
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை…
வாழ்கவே…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
நீயும் வளர்பிறையாக நிலவே… ஏஏ…
நீயும் வளர்பிறையாக நிலவே…
உயிரை தரும் என் காதல் நிலவே நிலவே…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…

BGM

பெண் : திரன திரன தீரன…
திரன திரன தீரன…
திரன திரன தீரன…
திரன திரன தீரன…

ஆண் : வெண்பனி நீ தூங்கிய புல் வெளி நான்…
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்…

ஆண் : வெண்பனி நீ தூங்கிய புல் வெளி நான்…
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்…
மின்னல் கோடி சேர்த்து வைத்தேன் நீ சிரித்த காட்சிகள்…
யாவும் இன்று மாயமாக யாரை கேட்க சாட்சிகள்…

ஆண் : உன்னை எண்ணி வாழ்ந்த காலம்…
கண்கள் ரெண்டும் ஈரமாக…
காதல் ஒன்றும் காயமல்ல…
காலப்போக்கில் ஆறி போக…
நெஞ்சம் எல்லாம் வாழுதே தழும்புகளால்…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…

BGM

ஆண் : என்னை விட்டு போனது அமைதி அன்றோ…
நீயும் இல்லா நானுமே அகதி அன்றோ…
நூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி…
எந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் நொடி…

ஆண் : புல்லின் மீது போகும்போது…
கால் சிவந்த வெண்மை நீ…
கல்லின் மீது நீயும் இங்கு போவதென்ன கண்மணி…
இந்த ஜென்மம் வாழ்வதே உனக்கெனதான்…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
நீயும் வளர்பிறையாக நிலவே…
உயிரை தருவேன் என் காதல் நிலவே நிலவே…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…

ஆண் : வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்…
வானம் உள்ளவரை வாழ்க என்றும்…
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை…
வாழ்கவே…

ஆண் : வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்…
வானம் உள்ளவரை வாழ்க என்றும்…
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை…
வாழ்கவே…


Notes : Yenthen Vanin Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. எந்தன் வானின் பாடல் வரிகள்.


வான் நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ் & கார்த்திக்ஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Vaan Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

ஆண் : உன் அழகினை பாட…
என் தமிழ் மொழி போதாது…
நான் உவமைகள் சொன்னால்…
அது முழுமையென்றாகாது…

ஆண் : நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்…
அவன் படைப்பினில் மிக சிறந்தவள்…
ஓஹோஹோ ஹோ… ஓஓ ஓஓ…

BGM

ஆண் : சிலு சிலுவென விழும் புது பனி துளியோ…
மழை எழுதும் முதல் கவியோ…
தம் தம் தம் சங் சங்கீதம் கொலுசோடு ஜல்…
நீலம் தொயித்த அந்த ஆகாயம்…
உந்தன் மேலாடும் நூலாடையோ…

ஆண் : ஒரு சரம் சிரிக்கையில் தெரிக்கையில்…
புது புது கவிதைகள் புறப்படும் புலப்படும்…

ஆண் : ரதியே ரதம்போல் நடந்தேன்…
நீ வரும் வழி எங்கும்…
குறுஞ்சி மலர்போல் குலுங்கும்…
கூர் நெருஞ்சி முள் என்றும்…

ஆண் : நதிக்குள் குதிக்கும் மீன்கள்…
உன் நீள் விழி கண்டு…
நிலத்தில் வாழும் மீனோ…
என வியர்ப்பது உண்டு…

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

BGM

ஆண் : தினம் தினம் மனதினில் முதல் முகமெழுதி…
ரசித்திருப்பேன் உயிர் தழுவி…

ஆண் : கா தல் தே வி என் நெஞ்சம் உன் கோயில் தான்…
காதல் என்னும் அந்த ஒர் தீபம்…
எந்தன் எண்ணங்கள் ஏற்றதோ…

ஆண் : இடி மின்னல் மழையிலும் அடிகின்ற புயலிலும்…
உயிர் உள்ள வரையிலும் ஒளி விடும் விளக்கிது…

ஆண் : என்னைதான் கணம் நீ பிரிந்தால்…
நீர் விழிகளும் வார்க்கும்…
உன்னைதான் வருத்தும் அவள் யார்…
என இயற்கையும் கேட்கும்

ஆண் : பெண்ணை அழகாய் படைத்தால்…
அந்த இயற்கையும் வேலை…
அறிந்தும் என்னையே கேட்டாய்…
அட இது என்ன லீலை…

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

ஆண் : உன் அழகினை பாட…
என் தமிழ் மொழி போதாது…
நான் உவமைகள் சொன்னால்…
அது முழுமையென்றாகாது…

ஆண் : நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்…
அவன் படைப்பினில் மிக சிறந்தவள்…
ஓஹோஹோ ஹோ… ஓஓ ஓஓ…

BGM


Notes : Vaan Nila Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. வான் நிலா பாடல் வரிகள்.


சொன்னாலும் கேட்பதில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Sonnallum Song Lyrics in Tamil


BGM

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

பெண் : ஒன்றை மறைத்து வைத்தேன்…
சொல்ல தடை விதித்தேன்…
நெஞ்சை நம்பி இருந்தேன்…
அது வஞ்சம் செய்தது…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

ஆண் : ஓ கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்…
உன்னை போல அல்ல உண்மை சொன்னது நீ…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM

ஆண் : உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு…
உலகினில் உள்ளதோ உயிரே…

பெண் : சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு…
கிழக்குக்கு நீதான் உயிரே…

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்…
சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

ஆண் : ஓ… நங்கை உந்தன் நெஞ்சம்…
நான் கொடுத்த லஞ்சம்…
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது…

பெண் : சொன்னாலும்…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM

ஆண் : விழி சிறையில் பிடித்தாய்…
விலகுதல் போல் நடித்தாய்…
தினம் தினம் துவண்டேன் தளிரே…

பெண் : நதி என நான் நடந்தேன்…
அணை தடுத்தும் கடந்தேன்…
கடைசியில் கலந்தேன் கடலே…

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்…
சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை…

ஆண் : ஓ… பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு…
வந்து விடும் மேலே வஞ்சி கொடியே…

பெண் : சொன்னாலும்… சொன்னாலும்…
ஆண் : கேட்டிராது கன்னி மனது…

குழு : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

BGM


Notes : Sonnallum Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vairamuthu. சொன்னாலும் கேட்பதில்லை பாடல் வரிகள்.


ஏ ஏ என்னாச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவசுந்தரா தாஸ்ஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Ye Ye Enna Aachu Song Lyrics in Tamil


பெண் : ஒகே… டர ர டர தர டர ரர ரா…
பர ர பர ர பர ரரரம்…
ஷபபாஹ் பர ர பர ரரரம்…
தர ரம்பர ரம்ஷரபரபம்…

பெண் : ஏ ஏ என்னாச்சு உனக்கு…
புதுசாய் இந்த பார்வை எதற்கு…
நேற்று நீ இப்படி இல்லை…
இன்றெப்படி நல்லவன் ஆனாய்…

பெண் : ம்ம்ம்… ம்ம்ம்ம்… மவனே…

பெண் : ஏ ஏ என்னாச்சு உனக்கு…
புதுசாய் இந்த பார்வை எதற்கு…
நேற்று நீ இப்படி இல்லை…
இன்றெப்படி நல்லவன் ஆனாய்…

பெண் : காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ…
கவிஞன் என்று உனை ஆக்கியதோ…
காதல் வைரஸ் உனை தாக்கியதோ…

BGM

பெண் : ஊலால லால லா லால லா லா லா…
லால லா லால லா லா லா…
ஊலால லால லா லால லா லா லா…
லால லா லால லா லா லா…

பெண் : பெண்ணை பெண்ணை பெண்ணை பெண்ணை…

பெண் : பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்…
டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம்…
நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்…
சொல்லாததை செய்பவன் வேண்டாம்…

பெண் : சும்மா உம்யென இருப்பவன் வேண்டாம்…
தினம் ஜம்யென இருப்பவன் வேண்டாம்…

BGM

பெண் : பெண்ணை அடிகடி ரசிப்பவன் வேண்டாம்…
ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்…
ரொம்பவும் ரொம்பவும் உத்தமபுத்திரன் வேண்டாம்…
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

BGM

பெண் : ஏ ஏ என்னாச்சு உனக்கு…
புதுசாய் இந்த பார்வை எதற்கு…
நேற்று நீ இப்படி இல்லை…
இன்றெப்படி நல்லவன் ஆனாய்…

பெண் : டர ர டர தர டர ரர ரா…
பர ர பர ர பர ரரரம்…
ஷபபாஹ் பர ர பர ரரரம்…
தர ரம்பர ரம்ஷரபரபம்…

BGM

பெண் : செல் போன்களை மறந்தவன் வேண்டும்…
தொலைகாட்சியை துறந்தவன் வேண்டும்…
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்…
பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்…

பெண் : ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்…
வெளி படையாய் இருப்பவன் வேண்டும்…

BGM

பெண் : எப்பவாச்சு கோவிக்க வேண்டும்…
செல்ல பெயர் வச்சு கூப்பிட வேண்டும்…
அட அப்பவும் இப்பவும் எப்பவும்…
எங்களின் நண்பனாக வாழ்ந்திட வேண்டும்…

BGM

பெண் : ஏ ஏ என்னாச்சு உனக்கு…
குழு : உனக்கு…
பெண் : புதுசாய் இந்த பார்வை எதற்கு…
குழு : எதற்கு…
பெண் : நேற்று நீ இப்படி இல்லை…
குழு : இல்லை…
பெண் : இன்றெப்படி நல்லவன் ஆனாய்…
குழு : ஆனாய்…
பெண் : மவனே…

பெண் : ஏ ஏ என்னாச்சு உனக்கு…
குழு : உனக்கு…
பெண் : புதுசாய் இந்த பார்வை எதற்கு…
குழு : எதற்கு…
பெண் : நேற்று நீ இப்படி இல்லை…
குழு : இல்லை…
பெண் : இன்றெப்படி நல்லவன் ஆனாய்…
குழு : ஆனாய்…

பெண் : காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ…
கவிஞன் என்று உனை ஆக்கியதோ…
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ…
கவிஞன் என்று உனை ஆக்கியதோ…

பெண் : ஒகே… டர ர டர தர டர ரர ரா…
பர ர பர ர பர ரரரம்…
ஷபபாஹ் பர ர பர ரரரம்…
தர ரம்பர ரம்ஷரபரபம்…
ஒகே…


Notes : Ye Ye Enna Aachu Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. ஏ ஏ என்னாச்சு பாடல் வரிகள்.