வான் நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ் & கார்த்திக்ஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Vaan Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

ஆண் : உன் அழகினை பாட…
என் தமிழ் மொழி போதாது…
நான் உவமைகள் சொன்னால்…
அது முழுமையென்றாகாது…

ஆண் : நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்…
அவன் படைப்பினில் மிக சிறந்தவள்…
ஓஹோஹோ ஹோ… ஓஓ ஓஓ…

BGM

ஆண் : சிலு சிலுவென விழும் புது பனி துளியோ…
மழை எழுதும் முதல் கவியோ…
தம் தம் தம் சங் சங்கீதம் கொலுசோடு ஜல்…
நீலம் தொயித்த அந்த ஆகாயம்…
உந்தன் மேலாடும் நூலாடையோ…

ஆண் : ஒரு சரம் சிரிக்கையில் தெரிக்கையில்…
புது புது கவிதைகள் புறப்படும் புலப்படும்…

ஆண் : ரதியே ரதம்போல் நடந்தேன்…
நீ வரும் வழி எங்கும்…
குறுஞ்சி மலர்போல் குலுங்கும்…
கூர் நெருஞ்சி முள் என்றும்…

ஆண் : நதிக்குள் குதிக்கும் மீன்கள்…
உன் நீள் விழி கண்டு…
நிலத்தில் வாழும் மீனோ…
என வியர்ப்பது உண்டு…

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

BGM

ஆண் : தினம் தினம் மனதினில் முதல் முகமெழுதி…
ரசித்திருப்பேன் உயிர் தழுவி…

ஆண் : கா தல் தே வி என் நெஞ்சம் உன் கோயில் தான்…
காதல் என்னும் அந்த ஒர் தீபம்…
எந்தன் எண்ணங்கள் ஏற்றதோ…

ஆண் : இடி மின்னல் மழையிலும் அடிகின்ற புயலிலும்…
உயிர் உள்ள வரையிலும் ஒளி விடும் விளக்கிது…

ஆண் : என்னைதான் கணம் நீ பிரிந்தால்…
நீர் விழிகளும் வார்க்கும்…
உன்னைதான் வருத்தும் அவள் யார்…
என இயற்கையும் கேட்கும்

ஆண் : பெண்ணை அழகாய் படைத்தால்…
அந்த இயற்கையும் வேலை…
அறிந்தும் என்னையே கேட்டாய்…
அட இது என்ன லீலை…

ஆண் : வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…

ஆண் : பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

ஆண் : உன் அழகினை பாட…
என் தமிழ் மொழி போதாது…
நான் உவமைகள் சொன்னால்…
அது முழுமையென்றாகாது…

ஆண் : நீ ஒரே ஒருதரம் பிறந்தவள்…
அவன் படைப்பினில் மிக சிறந்தவள்…
ஓஹோஹோ ஹோ… ஓஓ ஓஓ…

BGM


Notes : Vaan Nila Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. வான் நிலா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top