நிலவே நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்நிலாவே வா

Nilave Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவே நிலவே நிலவே நிலவே…
நில்லு நில்லு…
திருவாய் மொழிகள் சொல்லு சொல்லு…

ஆண் : மலரே மலரே மலரே மலரே…
சொல்லு சொல்லு…
மனதை தமிழில் சொல்லு சொல்லு…

ஆண் : கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்…
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை…
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு…
கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை…
பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம்…
மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை…

பெண் : மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க…
மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை…

பெண் : மொழியே போ போ போ…
அழகே வா வா வா…
மொழியே போ போ போ…
அழகே வா வா வா…

BGM

ஆண் : ரதியே ரதியே ரதியே ரதியே…
காதல் எண்ணம் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால்…

ஆண் : வளரும் பிறையே பிறையே பிறையே…
வானம் எட்டி தொடவும் முடியும் என்னால் என்னால்…

ஆண் : வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால்…
காற்றை கடன் வாங்கி பறந்து போவேன்…
கால வெளியோடு கரைந்து போவேன்…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

BGM

பெண் : வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு…
மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா…
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு…
கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா…

பெண் : சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும்…
சொல்லாத காதல் தீர்வதுண்டா…

பெண் : மொழியே போ போ போ…
அழகே வா வா வா…
மொழியே போ போ போ…
அழகே வா வா வா…

BGM

ஆண் : நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே…
கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம் என்ன என்ன…
கனவே கனவே கனவே கனவே…
கண்ணீர் வற்றி கண்ணில் ஜீவன் மின்ன மின்ன…

ஆண் : வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்…
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்…
உடலை என் ஜீவன் உதறிப் போகும்…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

BGM

பெண் : உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்…
உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை…
இரு கண்கள் பேசும் பாஷைகளை…
இரு நூறு மொழிகள் சொல்வதில்லை…

பெண் : தான் கொண்ட காதல் மொழிவதற்கு…
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை…

பெண் : மொழியே போ போ போ…
அழகே வா வா வா…
மொழியே போ போ போ…
அழகே வா வா வா…


Notes : Nilave Nilave Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. நிலவே நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading