சொன்னாலும் கேட்பதில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Sonnallum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

பெண் : ஒன்றை மறைத்து வைத்தேன்…
சொல்ல தடை விதித்தேன்…
நெஞ்சை நம்பி இருந்தேன்…
அது வஞ்சம் செய்தது…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

ஆண் : ஓ கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும்…
உன்னை போல அல்ல உண்மை சொன்னது நீ…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

—BGM—

ஆண் : உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு…
உலகினில் உள்ளதோ உயிரே…

பெண் : சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு…
கிழக்குக்கு நீதான் உயிரே…

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்…
சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை…

பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

ஆண் : ஓ… நங்கை உந்தன் நெஞ்சம்…
நான் கொடுத்த லஞ்சம்…
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது…

பெண் : சொன்னாலும்…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

—BGM—

ஆண் : விழி சிறையில் பிடித்தாய்…
விலகுதல் போல் நடித்தாய்…
தினம் தினம் துவண்டேன் தளிரே…

பெண் : நதி என நான் நடந்தேன்…
அணை தடுத்தும் கடந்தேன்…
கடைசியில் கலந்தேன் கடலே…

பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்…
சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை…

ஆண் : ஓ… பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு…
வந்து விடும் மேலே வஞ்சி கொடியே…

பெண் : சொன்னாலும்… சொன்னாலும்…
ஆண் : கேட்டிராது கன்னி மனது…

குழு : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…

—BGM—


Notes : Sonnallum Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vairamuthu. சொன்னாலும் கேட்பதில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading