ஆடாதடா ஆடாதடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவாதேவாசெந்தூரபாண்டி

Aadathada Aadathada Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…

ஆண் : அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து…
ஆட்டி வைக்கிறான்…
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்…
பூட்டி வைக்கிறான்…

ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…

—BGM—

ஆண் : பத்து மாசம் சுமந்து அவ பட்டினிதான் கெடப்பா…
நம்மை பக்குவமா பெத்தெடுக்க பத்தியம்தான் இருப்பா…
மூச்சடக்கி முக்குளிச்ச முத்த போல காப்பா…
அவ முந்தானையில் தொட்டில் கட்டி முத்தம் நூறு கொடுப்பா…

ஆண் : பெத்தபுள்ள துடிக்கும் போது…
பெத்தபுள்ள துடிக்கும் போது கண்ணீர் சிந்துவா…
அது கண்ணீர் இல்லடா அவ ரத்தம்தானடா…
பூமியில நடந்து வரும் தெய்வம்தாண்டா தாயி…
அத புரிஞ்சிக்காம பெத்த மனச தவிக்கவிட்ட பாவி…

ஆண் : ஆடாதடா யப்பா…

ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…

ஆண் : அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து…
ஆட்டி வைக்கிறான்…
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்…
பூட்டி வைக்கிறான்…

ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…

—BGM—

ஆண் : சினிமாவுல காதலிச்சா ரசிக்குதப்பா உள்ளம்…
நெஜ வாழ்கையில காதலிச்சா பறிக்குதப்பா பள்ளம்…
பொறக்குறப்போ தலையிலதான் எழுதி வைச்சதப்பா…
ஒரு பொண்ணும் ஆணும் ஆசப்பட்டா அதுவும் என்ன தப்பா…

ஆண் : காத்துக்கொரு வேலி இல்ல…
காத்துக்கொரு வேலி இல்ல…
காதலுக்கும் வேலி இல்ல…
ஜாதி மத பேதம் என்ன…
சாத்தானுக்கு வேதம் என்ன…

ஆண் : நெழலும் மிதிச்சு அழிக்க வந்த முட்டாளு…
பூமி சுத்துற மட்டும் காதல் இருக்கும் நீ கேளு…

ஆண் : தெரிஞ்சும் ஆடாதடா யப்பா…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…

ஆண் : அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து…
ஆட்டி வைக்கிறான்…
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்…
பூட்டி வைக்கிறான்…

ஆண் : ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…


Notes : Aadathada Aadathada Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. ஆடாதடா ஆடாதடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading