Category Archives: சங்கமம்

முதல்முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Mudhal Murai Song Lyrics in Tamil


பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…

BGM

பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…

பெண் : முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன்…
கண்ணீருண்டு சோகமில்லை…
ஆமாம் மழையுண்டு மேகமில்லை…

BGM

பெண் : கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி…
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன…

ஆண் : சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்…
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன…

பெண் : விதையொன்று உயிா் கொள்ள…
வெப்பக்காற்று ஈரம் வேண்டும்…
காதல் வந்து உயிா் கொள்ள காலம் கூட வேண்டும்…

ஆண் : ஒரு விதை உயிா் கொண்டது…
ஆனால் இரு நெஞ்சில் வோ் கொண்டது…

ஆண் : சலங்கையே கொஞ்சம் பேசு…
மௌனமே பாடல் பாடு…
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீா் உரையாடும்…
அதில் கவிதை அரங்கேறும்…

BGM

பெண் : பாதையும் தூரம் நான் ஒரு பாரம்…
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா…

ஆண் : உடலுக்குள் இருக்கும் உயிா் ஒரு சுமையா…
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா…

பெண் : தந்தை தந்த உயிா் தந்தேன்…
தாய் தந்த உடல் தந்தேன்…
உறவுகள் எல்லாம் சோ்த்து உன்னிடம் கண்டேன்…

ஆண் : மொத்தத்தையும் நீ கொடுத்தாய்…
ஆனால் முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்…

BGM

பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம்தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…

பெண் : முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன்…
கண்ணீருண்டு சோகமில்லை…
ஆமாம் மழையுண்டு மேகமில்லை…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. முதல்முறை பாடல் வரிகள்.


மாா்கழித் திங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி, பி. உன்னிகிருஷ்ணன் & ஸ்ரீ மதுமிதாஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Margazhi Thingal Allava Song Lyrics in Tamil


பெண் : மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்…
நீராடப் போதுவீா்…
போதுமினோ நோிழையீா்…

பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள்…
கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்…
ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

BGM

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : வருவாய் தலைவா…
வாழ்வே வெறும் கனவா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

BGM

பெண் : இதயம் இதயம் எாிகின்றதே…
இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே…
உள்ளங்கையில் ஒழுகும் நீா்போல்…
என்னுயிரும் கரைவதென்ன…

பெண் : இருவரும் ஒரு முறை காண்போமா…
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா…
கலையென்ற ஜோதியில் காதலை எாிப்பது…
சாியா பிழையா விடை நீ சொல்லய்யா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : வருவாய் தலைவா…
வாழ்வே வெறும் கனவா…

BGM

ஆண் : சூடித் தந்த சுடா்கொடியே…
சோகத்தை நிறுத்திவிடு…
நாளை வரும் மாலையென்று…
நம்பிக்கை வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு…

ஆண் : நம் காதல் ஜோதி கலையும் ஜோதி…
கலைமகள் மகளே வா வா…

ஆண் : ஆஆஆ… காதல் ஜோதி கலையும் ஜோதி…
ஆஆஆ… ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும்…
ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும்… வா வா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

குழு : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

குழு : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…


Notes : Margazhi Thingal Allava Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. மாா்கழித் திங்கள் பாடல் வரிகள்.


வராக நதிக்கரை ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Varaha Nadhikarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

BGM

{ ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச… } * (2)

ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

குழு : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…

BGM

ஆண் : பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்…
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு…
பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்…
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு…

ஆண் : பறந்துவந்து… ம்ம்ம்ம்ம்…
விருந்து கொடு… ம்ம்ம்ம்ம்…

ஆண் : மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு…
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு…

ஆண் : ஓ… காவோிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி…
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி…

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…

{ ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்… } * (2)

BGM

ஆண் : நீ என்னக் கடந்து போகயிலே…
உன் நிழல பிடிச்சுகிட்டேன்…
நீ என்னக் கடந்து போகயிலே…
உன் நிழல பிடிச்சுகிட்டேன்…

ஆண் : நிழலுக்குள்ள… ம்ம்ம்ம்ம்…
குடியிருக்கேன்… ம்ம்ம்ம்ம்…

ஆண் : ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க…
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க…
ஓஓஓ… ஒத்த விழிப்பாா்வை ஊடுருவப் பாா்த்து…
தாப்பா தொிச்சிடுச்சு… தாப்பா தொிச்சிடுச்சு…

ஆண் : ஏ கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

{ ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச… } * (2)

{ ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்… } * (2)

குழு : தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…


Notes : Varaha Nadhikarai Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. வராக நதிக்கரை ஓரம் பாடல் வரிகள்.


sowkiyama-kannae-song-lyrics-in-tamil

சௌக்கியமா கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநித்யஸ்ரீ மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Sowkiyama Kannae Song Lyrics in Tamil


BGM

குழு : தனதோம் த தீம்த தனதோம் த தீம்த…
தனதன தோம் தனத்தோம்…
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்…
தகு திகு தனதன தோம் தனத்தோம்…

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா…

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா… சௌக்கியமா…

பெண் : தனதோம் த தீம்த தோம் தீம்த…
தனதன தோம் தனத்தோம்…
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்…
தகு திகு தனதன தோம் தனத்தோம்…

பெண் : தன தோம்தோம்த…
தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம் என…
விழிகளில் நடனமி்ட்டாய்…
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்…
மெல்ல மெல்ல…
என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்…

பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்…
மனதை தழுவும் ஒரு அம்பானாய்…
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்…
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்…

பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்…
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா…

BGM

பெண் : சூாியன் வந்து வாவெனும் போது…
சூாியன் வந்து வாவெனும் போது…
சூாியன் வந்து வாவெனும் போது…
என்ன செய்யும் பனி துளி…
என்ன செய்யும் பனி துளி…

பெண் : கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு…
கோடி கையில் என்னை அள்ளி எடு…
கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு…
கோடி கையில் என்னை அள்ளி எடு…

பெண் : அன்புநாதனே நீ அணிந்த மோதிரம்…
வளையலாகவே துறும்பென இளைத்தேன்…
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்…
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்…

பெண் : என் காற்றில் சுவாசம் இல்லை…
என் காற்றில் சுவாசம் இல்லை…
என் காற்றில் சுவாசம் இல்லை…
என் காற்றில் சுவாசம் இல்லை…

பெண் : அது கிடக்கட்டும்விடு…
உனக்கென ஆச்சு…

பெண் : சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா…

குழு : தன தோம் த தீம்த தோம் த தீம்த…
தனதன தோம் தனத்தோம்…
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்…
தகு திகு தனதன தோம் தனத்தோம்…

பெண் : தன தோம்தோம்த தீம்தீம்த…
தோம்தோம்த தீம்தீம் என…
விழிகளில் நடனமி்ட்டாய்…
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்…
மெல்ல மெல்ல…
என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்…

பெண் : மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்…
மனதை தழுவும் ஒரு அம்பானாய்…
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்…
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்…

பெண் : ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்…
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…

பெண் : சௌக்கியமா கண்ணே…
சௌக்கியமா… சௌக்கியமா…
சௌக்கியமா… சௌக்கியமா…
சௌக்கியமா… சௌக்கியமா…
சௌக்கியமா… சௌக்கியமா…

BGM


Notes : Sowkiyama Kannae Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. சௌக்கியமா கண்ணே பாடல் வரிகள்.


மழைத்துளி மழைத்துளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & எம்.எஸ்.விஸ்வநாதன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Mazhai Thuli Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

BGM

ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா…
வணக்கமுங்க…
என்னை ஆடாம ஆட்டி வச்ச…
வணக்கமுங்க…

ஆண் : என் காலுக்கு சலங்கையிட்ட…
உன் காலடிக்கு முதல் வணக்கம்…
என் கால் நடமாடுமையா…
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்…

ஆண் : என் காலுக்கு சலங்கையிட்ட…
உன் காலடிக்கு முதல் வணக்கம்…
என் கால் நடமாடுமையா…
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்…

ஆண் : நீ உண்டு உண்டு என்ற போதும்…
அட இல்லை இல்லை என்றபோதும்…
சபை ஆடிய பாதமிது…
நிக்காது ஒருபோதும்…

ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா…
வணக்கமுங்க… வணக்கமுங்க…
என்னை ஆடாம ஆட்டி வச்ச…
வணக்கமுங்க… வணக்கமுங்க…

BGM

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

BGM

ஆண் : தண்ணியில மீன் அழுதா…
கரைக்கொரு தகவலும் வருவதில்ல…
எனக்குள்ள நான் அழுதா…
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல…

ஆண் : என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும்…
வைரம் வைரம் ஆகுமே…
சபதம் சபதம் என்றே…
சலங்கை சலங்கை பாடுமே…

BGM

ஆண் : மனமே மனமே…
சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு…
விழியே விழியே…
இமையே தீயும்போதும் கலங்காதிரு…

ஆண் : நதி நதி அத்தனையும்…
கடலில் சங்கமம்…
நட்சத்திரம் அத்தனையும்…
பகலில் சங்கமம்…
கலைகளின் வெகுமதி…
உன்னிடத்தில் சங்கமம்… சங்கமம்…

ஆண் : மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…

ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா…
வணக்கமுங்க…
என்னை ஆடாம ஆட்டி வச்ச…
வணக்கமுங்க…

BGM

ஆண் : மழைக்காகத்தான் மேகம்…
அட கலைக்காகத்தான் நீயும்…
உயிா் கலந்தாடுவோம் நாளும்…
மகனே வா…

ஆண் : நீ சொந்தக்காலிலே நில்லு…
தலை சுற்றும் பூமியை வெல்லு…
இது அப்பன் சொல்லிய சொல்லு…
மகனே வா… மகனே வா…

ஆண் : ஊருக்காக ஆடும் கலைஞன்…
தன்னை மறப்பான்…
தன் கண்ணீரை மூடிக்கொண்டு…
இன்பம் கொடுப்பான்…

ஆண் : புலிகள் அழுவது ஏது…
அட பறவையும் அழ அறியாது…

ஆண் : போா்களம் நீ புகும்போது…
முள் தைப்பது கால் அறியாது…
மகனே… மகனே…

ஆண் : காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது…
கலைக்கொரு தோல்வி கிடையாது… கிடையாது…

ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க…
என்னை ஆடாம ஆட்டி வச்ச…
வணக்கமுங்க…

ஆண் : என் காலுக்கு சலங்கையிட்ட…
உன் காலடிக்கு முதல் வணக்கம்…
என் கால் நடமாடுமையா…
நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்…

ஆண் : நீ உண்டு உண்டு என்ற போதும்…
அட இல்லை இல்லை என்றபோதும்…
நீ உண்டு உண்டு என்ற போதும்…
அட இல்லை இல்லை என்றபோதும்…

ஆண் : சபை ஆடிய பாதமிது…
நிக்காது ஒருபோதும்…

ஆண் : ( மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்… ) *6


Notes : Mazhai Thuli Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. மழைத்துளி பாடல் வரிகள்.