Category Archives: காலமெல்லாம் காத்திருப்பேன்

காலமெல்லாம் காத்திருப்பேன் – Kaalamellam Kaathiruppen (1997)

பச்சகொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாலமெல்லாம் காத்திருப்பேன்

Pachai Kodi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
குழு : ஹோ ஹோய் ஹோ ஹோய்…

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…

ஆண் : பச்சமல தேரபோல நிக்குறியே அப்படியே…
குழு : பச்சமல தேரபோல நிக்குறியே அப்படியே…

ஆண் : பச்ச கலர் சேல கட்டி…
சொக்க வச்சா அப்படியே…
குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…

ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…
குழு : ஹோ ஹோய் ஹோ ஹோய்…

BGM

ஆண் : ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்…
நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா…

BGM

குழு : ரோட்டுலதான் தார் ரோட்டுலதான்…
ஆண் : நீ நடந்தா கூட கொஞ்சம் நான் நடந்தா…

குழு : பாட்டு பாடச்சொல்லி பாலகனும் வந்து…
பாதை போட்டு தர நிக்குறான்டி…

BGM

ஆண் : பாட்டு பாடச்சொல்லி பாலகனும் வந்து…
பாதை போட்டு தர நிக்குறான்டி…

குழு : பாதை போட்டதுமே பாத்து நடந்துக்க…
பள்ளத்த பாத்து நீ நிக்காதடி…

ஆண் : பள்ளம் மேடு இல்லாம இங்க பன்னபோறோம்…
நாங்க நிச்சயமா…

குழு : நாளைக்குள்ள போட்டுதறோம்…
எங்க ரோட்ட பூராம் எங்க சத்தியமா…

ஆண் : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
குழு : ஹோ ஹோய்…

ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…
குழு : ஹோ ஹோய்…

BGM

ஆண் : மஞ்சக்குருவி நீ கொஞ்சம் எறங்கி…
மலையருவி போல நீ சொரம் எழுதி…

BGM

ஆண் : மஞ்சக்குருவி…
குழு : நீ கொஞ்சம் எறங்கி…
ஆண் : மலையருவி…
குழு : போல நீ சொரம் எழுதி…

ஆண் : குத்தால சாரலில் நீ குளிச்சி…
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி…

BGM

குழு : குத்தால சாரலில் நீ குளிச்சி…
உன் கொண்டையில மல்லி பூவும் வச்சி…

ஆண் : குயில போல் ஒரு பாட்டு சொல்லு…
எந்த கொறையிருந்தாலும் கேட்டு சொல்லு…

குழு : தண்ணி கொடம் தலையில் வச்சு…
வாங்கன்னு கூப்பிடம்மா…

ஆண் : தள்ளி தள்ளி நின்னு என்ன…
புது சந்தத்தில பாட்டு சொல்லனும்மா…

குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…

ஆண் : பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…

குழு : பச்சமல தேர போல…
நிக்குறியே அப்படியே…
ஆண் : பச்சமல தேர போல…
நிக்குறியே அப்படியே…

குழு : பச்ச கலர் சேல கட்டி…
சொக்க வச்சா அப்படியே…

குழு : பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…


Notes : Pachai Kodi Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. பச்சகொடி பாடல் வரிகள்.


மணிமேகலையே மணி ஆகலையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாலமெல்லாம் காத்திருப்பேன்

Manimegalaiye Song Lyrics in Tamil


ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

BGM

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

ஆண் : அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு…
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு…
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை…
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்…

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

BGM

ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி…
தங்க நகை இல்லாமலே…
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே…

ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி…
தங்க நகை இல்லாமலே…
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே…

ஆண் : செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா…
சொந்தம் பந்தமே அன்புதானம்மா…

ஆண் : அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து…
நீ என்னைக்கட்டி போட்டிருக்க கண்ணுக்குள்ளே…

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

BGM

ஆண் : செம்பருத்தி பூவப்போல…
சின்னச்சேலை நூலைப்போல…
சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா… ஆ…

ஆண் : செம்பருத்தி பூவப்போல…
சின்னச்சேலை நூலைப்போல…
சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா… ஆ…

ஆண் : தென்றல் வருமா சேதி சொல்லுமா…
பக்கம் வருமா என்னை தொடுமா…
என்னைத் தொட்டுவிட்டா இனி எப்பவுமே…
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்…

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

ஆண் : அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு…
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு…
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை…
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்…

ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…

BGM


Notes : Manimegalaiye Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. மணிமேகலையே மணி ஆகலையே பாடல் வரிகள்.


அஞ்சாம் நம்பர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாலமெல்லாம் காத்திருப்பேன்

Anjam Number Song Lyrics in Tamil


ஆண் : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே…
ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே…

BGM

ஆண் : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே…
குழு : குயிலே தந்தானக்குயிலே…
ஆண் : ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே…
குழு : குயிலே தந்தானக்குயிலே…

ஆண் : சிவானந்தா காலனியில் பஸ்ஸு நின்னது…
அங்க பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னது…

ஆண் : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே…
குழு : குயிலே தந்தானக்குயிலே…
ஆண் : ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே…
குழு : குயிலே தந்தானக்குயிலே…

BGM

ஆண் : ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம் ஒன்பதுல முடிஞ்சிடும்…
குழு : முன்ன பின்ன போட்டதுன்ன லட்சகணக்கு மேல வரும்…

BGM

ஆண் : எத்தனையோ தலமுறை சொத்து இருக்கு எங்களுக்கு…
குழு : அத்தனையும் சொல்லனும்னு தேவையில்லை உங்களூக்கு…

ஆண் : ஆனைமலை ஆறுகுளம் எங்க பேருலே…
குழு : இந்த அக்கா மக ஊரு மட்டும் இன்னும் சேரல…

ஆண் : எங்க ஊரு ஆறு எல்லாருக்கும் சேரும்…
குழு : எங்க ஊரு ஆறு எங்கேயும் போய் சேரும்…
ஆண் : ஆத்துகுள்ள நீந்தி போனா அக்கரை போய் சேரும்…

குழு : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி…
ஆண் : தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே…
குழு : ஆறுமுகனை பார்க்க போறோம்…
ஆண் : தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே…

BGM

ஆண் : கண்ணுமணி பொன்னுமணி கண்டவங்க சொல்லும்படி…
சின்னமணி சொன்னபடி எல்லாமே அத்துபடி…

BGM

ஆண் : சுத்தமடி சுத்தமடி நான் சொல்றது புத்திமதி…
புத்திமதி இல்லையனா பக்கம் வந்து கத்துக்க நீ…

குழு : கத்துதர்றோம் கத்துதர்றோம் கண்ணுமணிக்கு…
பத்துதரம் பத்துதரம் சின்னமணிக்கு…

ஆண் : முந்தாநேத்து மேடம் சொன்னாங்க ஒரு பாடம்…
குழு : முந்தாநேத்து மேடம் சொன்னாங்க ஒரு பாடம்…
ஆண் : உங்க முந்தானைய முடிஞ்சு பஸ்ஸுல உக்காருங்க ஓரம்…

ஆண் : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி…
குழு : தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே…
ஆண் : ஆறுமுகனை பார்க்க போனேன்…
குழு : தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே…

ஆண் : ஏய் சிவானந்தா காலனியில் பஸ்ஸு நின்னது…
அங்க பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னது…

குழு : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி…
ஆண் : தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே…
குழு : ஆறுமுகனை பார்க்க போறோம்…
ஆண் : தந்தானக்குயிலே குயிலே தந்தானக்குயிலே…


Notes : Anjam Number Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. அஞ்சாம் நம்பர் பாடல் வரிகள்.


சுத்துதடி பம்பரத்தை போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாகாலமெல்லாம் காத்திருப்பேன்

Suthudhadi Bambarathai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுத்துதடி பம்பரத்தை போல…
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல…

BGM

ஆண் : ஹேய்… சுத்துதடி பம்பரத்தை போல…
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல…
இனி சம்மதிச்சா போடு வேண்டி மாலை…
நீ ஆடி வந்து சொல்லப் போற நாளே…

பெண் : கட்டழகன் கண்ணு பட்டதால…
இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல…
கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்…
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால…

ஆண் : அட சுத்துதடி பம்பரத்தை போல…
பெண் : ஹான்…
ஆண் : உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல…

BGM

ஆண் : சிந்தாமணிய போல…
பெண் : ஹ்ஹ்ம்ம்…
ஆண் : உன்னை சேத்துக்குவேன் கையி மேல…
பெண் : ஹ்ஹீம்ம்…
ஆண் : வந்தா மனசு போல…
பெண் : ஆஹா…
ஆண் : உன்னை வாழவைப்பேன் எண்ணம்போல…

பெண் : அட முத்து முத்து முத்தழகி முத்தமிட்ட கட்டழகி…
முத்திரைய கொட்டு ராசா…
சித்திரைக்கு மேல ஒரு சத்திரத்த தேர்ந்தெடுத்து…
ஒத்திகைய பாரு லேசா…

ஆண் : உன்ன பாக்குறேன்டி மானே…
சேத்துக்குறேன் நானே…

பெண் : சம்மதம் சொன்னதும் இப்ப…
நான் கொடுப்பேன் கொம்புத்தேனு…

ஆண் : ஹே… சுத்துதடி பம்பரத்தை போல…
பெண் : ஹேய்…
ஆண் : உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல…

பெண் : கட்டழகன் கண்ணு பட்டதால…
ஆண் : அப்பா…
பெண் : இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல…

BGM

பெண் : கண்ணால் வலைய போட்டு…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : இனி கண்ணா வளையல் மாட்டு…
ஆண் : ஆஹா…
பெண் : சொன்னா அருகில் வருவேன்…
ஆண் : ஆஆஆ…
பெண் : உனக்கு எல்லா சுகமும் தருவேன்…

ஆண் : பைய கொஞ்சம் கைய வச்சி…
கைய தொட்டு நெய்ய வச்சி…
செய்ய சொல்லி இழுக்குதடி…

ஆண் : செய்ய செய்ய சின்னக்கல்லும்…
செப்பு சிலையாக மாறும்…
சிந்தனைய தகர்க்குதடி…

பெண் : இந்த சித்தாடை மேல…
சிக்கிக்கிட்ட நூல…
சீக்கிரம் அவுத்துவிடு…
சொக்கி போனேன் உங்க மேல…

ஆண் : சுத்துதடி பம்பரத்தை போல…
பெண் : ஹ ஹா…
ஆண் : உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல…
பெண் : ஹோ ஹோ…
ஆண் : இனி சம்மதிச்சா போடுவேன்டி மாலை…
பெண் : ஹ ஹா…
ஆண் : நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே…
பெண் : ஆஹா ஹா…

பெண் : கட்டழகன் கண்ணு பட்டதால…
ஆண் : தினக்குதன…
பெண் : இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல…
ஆண் : தனக்குதின…
பெண் : கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன்…
நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால…
ஆண் : தினக்குதன…

ஆண் : சுத்துதடி பம்பரத்தை போல…
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல… ஏய்…

BGM


Notes : Suthudhadi Bambarathai Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. சுத்துதடி பம்பரத்தை போல பாடல் வரிகள்.


நில்லடி என்றது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாகாலமெல்லாம் காத்திருப்பேன்

Nilladi Endradhu Song Lyrics in Tamil


பெண் : நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…

BGM

பெண் : ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு…

பெண் : நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே…
ஆண் : இரவெதற்கு…

பெண் : நில்லடி என்றது உள்மனது…

BGM

ஆண் : சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி…
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி…
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்…

பெண் : நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்…
ஆண் : கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா…

பெண் : மங்கை அந்த மாலைப்பொழுதில் மயங்குவேனே தானாக…
ஆண் : ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் காலமே…

பெண் : நில்லடி என்றது உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…
நில்லடி என்றது உள்மனது…

BGM

பெண் : இருவிழி மலர்ந்தது உன் முகம் காண…
இடைவெளி ஆனது இதற்காகத்தானா…

ஆண் : வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்…
பெண் : மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்…

ஆண் : கண்ணும் கண்ணும் கலந்ததினாலே…
கண்ணன் மனம் கவி பாட…
இன்னும் இன்னும் வேண்டும் என்று…
ராதை மனம் எனைத்தேட…

பெண் : ஒரு நாளிலே பல காலங்கள்…
நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே…

ஆண் : நில்லடி என்றது…
பெண் : உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…

ஆண் : ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
பெண் : இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
ஆண் : நான் உன்னை அணைப்பேனே…
பெண் : இரவெதற்கு…

ஆண் : நில்லடி என்றது…
பெண் : உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…
ஆண் : நில்லடி…


Notes : Nilladi Endradhu Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. நில்லடி என்றது பாடல் வரிகள்.