Category Archives: பாஞ்சாலங்குறிச்சி

ஆத்தோரம் தோப்புக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாதேவாபாஞ்சாலங்குறிச்சி

Aathoram Thopukule Song Lyrics in Tamil


பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…

பெண் : கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து…
பின்னால வச்சிவிட ஆசை வச்சேன்…
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி…
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

BGM

பெண் : மாரளவு தண்ணியில மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க…
மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆசை வச்சேன்…

BGM

பெண் : பசுவப்போல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து…
குசும்பு பண்ண வேணுமின்னு ஆசை வச்சேன்…

BGM

பெண் : உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில…
கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன்…

BGM

பெண் : குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு…
மடி மேல காலைப்போட ஆசை வச்சேன்…

BGM

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…

BGM

பெண் : மேகாட்டு மூலையில மேகம் கருக்கையிலே…
சுக்குத்தண்ணி வச்சித்தர ஆசை வச்சேன்…

BGM

பெண் : மச்சும் குளிருகிற மார்கழி மாசத்துல…
மச்சானை தொட்டுத்தூங்க ஆசை வச்சேன்…

BGM

பெண் : மாமன் கட்டும் வேட்டியில மஞ்சக்கறை என்னதுன்னு…
மந்தையில நின்னு சொல்ல ஆசை வச்சேன்…

BGM

பெண் : ரெட்டிகுளம் ஆசாரிக்கு பொட்டியில பணம் கொடுத்து…
ரெட்டைத்தொட்டில் செய்யச்சொல்ல ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : அத்தானின் இடுப்புக்கு அண்ணாக்கயிறு கட்ட…
ஆசை வச்சேன்…
நறுக்கான தேகத்துக்கு நல்லெண்ணெய் தேய்சுவிட…
ஆசை வச்சேன்…

பெண் : வெந்நீரை கொதிக்க வச்சு மச்சானை குளிக்க வச்சு…
மாராப்பு நனையத்தானே ஆசை வச்சேன்…
மாந்தோப்பில் கட்டிலிட்டு மனம் போல தொட்டுத்தொட்டு…
மாமன் கூட பேசிடத்தான் ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…


Notes : Aathoram Thopukule Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தோரம் தோப்புக்குள்ள பாடல் வரிகள்.


வந்தியளா வந்தியளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுரேஷ் பீட்டர்ஸ் & அனுராதா ஸ்ரீராம்தேவாபாஞ்சாலங்குறிச்சி

Vantheyalla Vantheyalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தியளா வந்தியளா கூத்து பாக்க வந்தியளா…
நீங்க குத்த வைக்க வந்தியளா…

பெண் : ஐயா வந்தியளா வந்தியளா நாடகம் பாக்க வந்தியளா…
நீங்க நட்டமா நிக்க வந்தியளா…

ஆண் & பெண் : அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…
அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…
பெத்தெடுத்த தாயிமாரே…
பேரு பெற்ற பெரியோரே…

ஆண் : வணக்கமுங்க வணக்கம்…
பெண் : ஐயா வந்தனமுங்க வந்தனம்…
ஆண் : இங்கே வந்த சனமெல்லாம் குந்தனும்…

ஆண் & பெண் : நாங்க வரும் போது வாங்கியாந்தோம்…
வாசமுள்ள சந்தனம்…
சந்தனத்தை பூசுங்க நீங்க சந்தோஷமா பாருங்க…
மன்னாதி மன்னவராம் மறவர் குல மாணிக்கமா…
முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க…
முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க…

ஆண் & பெண் : பொறந்து வளந்த பூமி…
அதை போற்றி பாடுறோம் சாமி…
பொறந்து வளந்த பூமி…
அதை போற்றி பாடுறோம் சாமி…
அண்ணன் மாரே தம்பி மாரே…
அருமையுள்ள அக்கா மாரே…

ஆண் : ஏ புள்ளே சிட்டு…
பெண் : என்ன மச்சான்…

ஆண் : இந்த ஊரு ஐயாக்க மாரு அருமை பெருமை எல்லாம்…
பாடி முடுச்சுட்டோம்…
இனி நம்ம கூத்தை எடுத்து விட்டுறுவோமா…
பெண் : விட்டுறுவோம்…

ஆண் : உருண்ட மலை தெறண்ட மலை…
ஒய்யார கழுகு மலை…
பாசி படந்த மலையே தங்கமே தில்லாலே…
நான் படுத்துறங்கும் பஞ்சு மலையே தங்கமே தில்லாலே…
பாசி படந்த மலையே தங்கமே தில்லாலே…
நான் படுத்துறங்கும் பஞ்சு மலையே தங்கமே தில்லாலே…

பெண் : ஒண்ணு ரெண்டு கல் பொறுக்கி மாமா…
ஓடையில பாலங்கட்டி…
பாலத்துல நடக்கயில மச்சான்…
பாத்து பாத்து கண்ணடிச்சான்…

BGM

ஆண் : பாத்தா மொறக்கிறியே…
இழுத்து மறைக்கிறியே…
சுண்டி இழுக்கிறியே…
சூட்ட கெளப்புறியே…

பெண் : ஊரிருக்குது ஒரவிருக்குது…
பாத்திருக்குது பக்கமிருக்குது…
வேர்த்திருக்குது வெக்கம் தடுக்குது…

ஆண் : ஏன்டி இப்படி பசப்புற…
ஏன் ஆசையத்தான் உசுப்புற…
சுருக்கு பையா இடுப்புல…
என்ன சொருகி வச்சு மயக்குற…

ஆண் : ஓடக்காடு ஒடம்பக்காடு புள்ளே…
ஒளிஞ்சிருக்கும் கொய்யாக்காடு…
கொய்யாக்காட்டுக்கு உள்ள வந்தா…
நாம கூட்டாஞ்சோறு ஆக்கிடலாம்…

BGM

பெண் : ஏன் கைய புடிப்ப…
காதை புடிப்ப…
ஏன் இடுப்ப கிள்ளுவே…
கூட இருக்க சொல்லுவே…

ஆண் : அய்யோ சீலை தந்தனே…
நான் ரவிக்க தந்தனே…
ஏ… சோப்பு தந்தனே…
நானும் சீப்பு தந்தனே…

ஆண் : என்ன ஏச்சுப்புட்டாளே…
ஆள ஓச்சுப்புட்டாளே…
ஐயோ தாங்க முடியல…
நான் தூங்க முடியல…

ஆண் : ஏ… வாட வெத்தல வதங்க வெத்தல…
வாய்க்கு நல்லால்லே…
ஆ… வளஞ்ச கோர கொழஞ்ச கோர…
பாய்க்கு நல்லால்லே…

ஆண் : ஏ… நேத்து பூத்த ரோச பூவு…
கொண்டைக்கு நல்லால்லே…
அந்த குருவி கொத்துன கொய்யாபழம்…
தொண்டைக்கு நல்லால்லே…

ஆண் : ஏ… வாட வெத்தல ஆ… வதங்க வெத்தல…
ஏ… வாட வெத்தல வதங்க வெத்தல…
வாய்க்கு நல்லால்லே…
ஆ… வளஞ்ச கோர கொளஞ்ச கோர…
பாய்க்கு நல்லால்லே…

BGM

ஆண் : அடி சீனா சீனா ஏன் சிலுக்கு…
சிக்குன்னுதான் அது இருக்கு…

பெண் : அட வேணாம் ஒனக்கு இந்த கிறுக்கு…
நீ வேராள பாரு அதுக்கு…

ஆண் : சிம்பொனியா போனியா…
சினிமாவுக்கு வாரியா…
அடி குண்டு பொண்ணு மீனம்மா…
குச்சி ஐசு வேணுமா…

பெண் : இம்பாலா பாலோ பண்ணுவேசீனே…
நீயாக்க சீனு சொன்னே… ஓ ஹோய்…

ஆண் : ஹேய்… ரொம்பத்தான் பீத்திக்கிறியே…
போடி வெடிக்காத பொட்டு வெடியே…
ஐயோ சீனா சீனா ஏன் சிலுக்கு…
சிக்குன்னுதான் அது இருக்கு…

பெண் : ஏய்… ஒனக்குன்னுதான் இது இருக்கு…
ஓன் இஷ்டத்துக்கு அடி நொறுக்கு…

BGM


Notes : Vantheyalla Vantheyalla Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. வந்தியளா வந்தியளா பாடல் வரிகள்.


Ana Aavanna Song Lyrics in Tamil

ஆனா ஆவண்னா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகிருஷ்ணராஜ் & சுஜாதா மோகன்தேவாபாஞ்சாலங்குறிச்சி

Ana Aavanna Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனா ஆவன்னா…
அத்தை பொண்ண பாருன்னா…

BGM

ஆண் : ஏனா ஏயன்னா…
இவ எலுமிச்சபழ கலருன்னா…

BGM

ஆண் : ஆனா ஆவன்னா…
அத்தை பொண்ண பாருன்னா…
ஏனா ஏயன்னா…
இவ எலுமிச்சபழ கலருன்னா…

ஆண் : ஒத்தகல்லு மூக்குத்தி…
சும்மா மொறச்சி மொறச்சி பாக்குது…
ரெட்டை கல்லு கம்மலு…
என்ன வளைச்சி வளைச்சி இழுக்குது…

ஆண் : பொண்ணு நல்ல சைசூ…
பூவா போல நைசு…
இவ சுண்டு விரல் தொட்டுபுட்டா…
சூரியனும் அயிசு…

BGM

ஆண் : ஏக்கா ஏலக்கா…
நீ எந்த ஊரு ஆளாக்கா…
வாக்கா வாழைக்கா…
இது வாழத்தண்டு காலக்கா…

BGM

பெண் : எத்தனையோ ஆம்பளைங்க…
ஏங்கி ஏங்கி பார்த்தாக…
மானமுள்ள பொம்பளைங்க…
மாட்டிகிட மாட்டாக…

BGM

பெண் : உன்னை பத்தி ஊருக்குள்ள…
கிழவிங்களும் சொன்னக…
ஒதுங்கி நின்ன மாரப்பையும்…
ஒழுங்கு பண்ணி போட்டாக…

ஆண் : தின்னாத பழம் பழுத்து…
வளஞ்ச கொடி வளஞ்ச கொடி…
என்ன மட்டும் மடியில் வச்சி…
முடிஞ்சிக்கடி முடிஞ்சிக்கடி…

பெண் : வாக்கு வாதம் செய்யும் பொன்னையா…
உன் நாக்கு ரொம்ப நீலம்தானையா…

ஆண் : நீளம் பார்த்து சொன்ன பொன்னம்மா…
நான் ஆள பாக்க வந்த ஆளாம்மா…

பெண் : சுத்தி சுத்தி வம்பிழுக்கும்…
சூரகோட்டை வீரையா…
தந்தம் உள்ள யானையெல்லாம்…
தள்ளி கொஞ்சம் நில்லையா…

BGM

ஆண் : தேனிருக்கும் உதட்ட கொஞ்சம்…
தின்னு பார்க்க கூடாதா…
ஆக்கி வச்ச கட்டி சோர…
அள்ளித்தின்னா ஆகாதா…

BGM

பெண் : ஆம்பளளைக்கு பசி எடுத்தா…
அடக்கமுள்ள அடக்கமுள்ள…
பொம்பளைக்கு பசி எடுத்தா…
வெளிய சொல்லி பழக்கமில்ல…

ஆண் : பன்ச்சு எதுக்கு…
பத்த வைக்கதான்…
அட பாலு எதுக்கு…
எச்சி வைக்கதான்…

பெண் : நான் வெளஞ்சி நிக்கும்…
இனிப்பு கரும்புதான்…
அத ஒடச்சி திங்க…
ஆசை உனக்குதான்…

ஆண் : லவுக்கிகுள்ள என்ன வச்சி…
ளவ்வு பண்ணும் லவ்வாடி…
ஏறும் போதை இறங்கும் முன்னே…
எல்லாத்தையும் கொண்டாடி…

BGM


Notes : Ana Aavanna Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. ஆனா ஆவண்னா பாடல் வரிகள்.


உன் உதட்டோர சிவப்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாபாஞ்சாலங்குறிச்சி

Un Uthattora Sivappe Song Lyrics in Tamil


ஆண் : தன நானா நானே நா நா…
தன நானா நானே நனனானே நா நா…

BGM

ஆண் : உன் உதட்டோர சிவப்பே…
அந்த மருதாணி கடனா கேட்கும்…
கடனா கேட்கும்…

ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம்…
அந்த நிலவு வந்து உளவு பார்க்கும்…
உளவு பார்க்கும்…

BGM

ஆண் : என் செவ்வாழை தண்டே…
என் செவ்வாழை தண்டே சிறு காட்டு வண்டே…
உன்ன நெனச்சு தான் எச பாட்டு…
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு…

BGM

பெண் : ஏன் மம்முத…
அம்புக்கு இன்னும் தாமசம்… ஆஆ…

ஆண் : அடியே அம்மணி…
வில்லு இல்ல இப்போ கை வசம்… ஆ…

பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா…
மனசிருந்தா மார்க்கம் இருக்குது…

ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க…
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது…

BGM

பெண் : முருக மலை காட்டுக்குள்ள…
விறகு எடுக்கும் வேலையில…
தூரத்துல நின்னவரே…
தூக்கி விட்டால் ஆகாதா…

BGM

ஆண் : பட்ட விறக தூக்கிவிட்டா…
கட்ட விரலு பட்டுபுட்டா…
விறகில்லாம தீ புடிக்கும்…
வெட்கம் கெட்டு போகாதா…

பெண் : நீ தொடுவதா தொட்டுக்கோ…
சொந்தத்துல வரைமுறை இருக்கா…

ஆண் : நீ பொம்பளதானே…
உனக்கு அது நியாபகம் இருக்கா…

பெண் : உன் நெனப்புதான்…
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது… ஆஆ…

ஆண் : அட உன் கிறுக்குல…
எனக்கு இந்த பூமி சுத்துது…

BGM

ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா…
சேர்த்தடிக்க கை துடிக்கும்…
பொட்டு கன்னி உன்ன கண்டா…
புலி கூட தொட நடுங்கும்…

BGM

பெண் : உம்ம நெனச்சு பூசையில…
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்…
நீ குளிச்ச ஓடையில…
நான் குளிச்சா பூ மணக்கும்…

ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே…
என்னை ஏன் தூக்கி சுமக்குற…

பெண் : என் மனசுக்குள் புகுந்து…
ஏன் மச்சான் இறங்க மறுக்குற…

ஆண் : அடி என் நெஞ்சிலே…
ஏண்டியம்மா வத்தி வைக்குற…

பெண் : உன் ஆசைய…
எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற… ஆஆ…

BGM


Notes : Un Uthattora Sivappe Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. உன் உதட்டோர சிவப்பே பாடல் வரிகள்.