ஆத்தோரம் தோப்புக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாதேவாபாஞ்சாலங்குறிச்சி

Aathoram Thopukule Song Lyrics in Tamil


பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…

பெண் : கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து…
பின்னால வச்சிவிட ஆசை வச்சேன்…
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி…
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மாரளவு தண்ணியில மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க…
மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆசை வச்சேன்…

BGM

பெண் : பசுவப்போல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து…
குசும்பு பண்ண வேணுமின்னு ஆசை வச்சேன்…

BGM

பெண் : உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில…
கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன்…

BGM

பெண் : குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு…
மடி மேல காலைப்போட ஆசை வச்சேன்…

BGM

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…

BGM

பெண் : மேகாட்டு மூலையில மேகம் கருக்கையிலே…
சுக்குத்தண்ணி வச்சித்தர ஆசை வச்சேன்…

BGM

பெண் : மச்சும் குளிருகிற மார்கழி மாசத்துல…
மச்சானை தொட்டுத்தூங்க ஆசை வச்சேன்…

BGM

பெண் : மாமன் கட்டும் வேட்டியில மஞ்சக்கறை என்னதுன்னு…
மந்தையில நின்னு சொல்ல ஆசை வச்சேன்…

BGM

பெண் : ரெட்டிகுளம் ஆசாரிக்கு பொட்டியில பணம் கொடுத்து…
ரெட்டைத்தொட்டில் செய்யச்சொல்ல ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : அத்தானின் இடுப்புக்கு அண்ணாக்கயிறு கட்ட…
ஆசை வச்சேன்…
நறுக்கான தேகத்துக்கு நல்லெண்ணெய் தேய்சுவிட…
ஆசை வச்சேன்…

பெண் : வெந்நீரை கொதிக்க வச்சு மச்சானை குளிக்க வச்சு…
மாராப்பு நனையத்தானே ஆசை வச்சேன்…
மாந்தோப்பில் கட்டிலிட்டு மனம் போல தொட்டுத்தொட்டு…
மாமன் கூட பேசிடத்தான் ஆசை வச்சேன்…

பெண் : அத்தனையும் பொய்யாச்சு ராசா…
ஒத்தையில நிக்குதிந்த ரோசா…

பெண் : ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…


Notes : Aathoram Thopukule Song Lyrics in Tamil. This Song from Panchalankurichi (1996). Song Lyrics penned by Vairamuthu. ஆத்தோரம் தோப்புக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading