ராத்திரிக்கு கொஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்தேவேந்திரன்காலையும் நீயே மாலையும் நீயே

Rathirikku Konjam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…

ஆண் : சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்…
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்…
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்…

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…

—BGM—

ஆண் : மாணிக்க தொட்டில் கட்டி மெத்ததான் விரிச்சே…
தாலாட்டு பாட்டு படிச்சே…
நாளும் கண்ணு முழிச்சே…

ஆண் : மாராப்பில் என்ன மூடி பாலத்தான் கொடுத்தே…
ஆளாக்கி என்ன வளத்தே…
வாழ உயிர் கொடுத்தே…

ஆண் : காலம் செய்த கோலமிது…
குத்தத்தை யார் மேல் சொல்லுவது…
காலம் செய்த கோலமிது…
குத்தத்தை யார் மேல் சொல்லுவது…

ஆண் : அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்…
யார் கிட்ட சொல்லி அழுவேன்…

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…

—BGM—

ஆண் : கண் கெட்டு போன பின்பு தெய்வத்த அறிஞ்சேன்…
ஏக்கத்தில் நின்னு துதிச்சேன் ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்…
கை விட்டு போன செல்வம் மீண்டும் தான் வருமா…
காயங்கள் ஆறி விடுமா காலம் மாறி வருமா…

ஆண் : இருண்ட வானம் வெளுக்குமா…
நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா…
இருண்ட வானம் வெளுக்குமா…
நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா…

ஆண் : அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்…
யார் கிட்ட சொல்லி அழுவேன்…

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்…
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்…
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்…

ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…


Notes : Rathirikku Konjam Song Lyrics in Tamil. This Song from Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988). Song Lyrics penned by Vaali. ராத்திரிக்கு கொஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading