சந்தேக புயலடிச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்கே. ஜே. யேசுதாஸ்டி. ராஜேந்தர்சம்சார சங்கீதம்

Sandhega Puyaladicha Song Lyrics in Tamil


ஆண் : சந்தேக புயலடிச்சா சந்தோஷ பூ உதிரும்…
விதியோட விளையாட்டம்மா…
விதியோட விளையாட்டம்மா…

ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…

ஆண் : ஆவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க…
அழிவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க…
வாழ்க்கை என்னும் கண்ணாடிய இறைவன் கொடுக்கிறான்…
மதி கெட்ட மனிதன் ஏனோ போட்டு உடைக்கிறான்…

ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி…
வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி…

ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…

—BGM—

ஆண் : கண்ணிருந்தும் குருடனைப் போல நடப்பதேனம்மா…

—BGM—

ஆண் : பசும்பால பாழும் கள்ளா நினைப்பதேனம்மா…

—BGM—

ஆண் : சந்தேக நோய் வந்தா உறவ வாட்டுமே…

—BGM—

ஆண் : சொந்தங்கள பந்தங்கள பிரிய சொல்லுமே…

—BGM—

ஆண் : இரு மலர்கள் போல இரு பிள்ளை இருக்க…
அதை கூட பிரிக்க சபை ஒன்று நடக்க…
ஆண் பிள்ளை ஒரு பக்கம் பெண் பிள்ளை மறு பக்கம்…
எனச்சொல்லும் ஊர் சட்டம் விதி தீட்டும் சதி திட்டம்…

ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி…
வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி…


Notes : Sandhega Puyaladicha Song Lyrics in Tamil. This Song from Samsara Sangeetham (1989). Song Lyrics penned by T. Rajendar. சந்தேக புயலடிச்சா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading