Category Archives: கும்பக்கரை தங்கய்யா

Kootathula Kuninchu Song Lyrics in Tamil

கூட்டத்தில குனுஞ்சி நிக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், கே.எஸ்.சித்ரா & டி.எஸ்.ராகவேந்திராஇளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Kootathula Kuninchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்தனம் மாரியே சாமி எங்கள் தேவியே…
மந்திரமாக் காத்து நிற்கும் காளியே… தாயே…
சந்தனம் மாரியே சாமி எங்கள் தேவியே…
மந்திரமாக் காத்து நிற்கும் காளியே… அம்மா…

ஆண் : வந்திருந்து தாருமம்மா…
வாழ்க்கை இதைப் பாருமம்மா…
கேட்டதெல்லாம் நீ தருவாயே…தேவி…

ஆண் : வந்திருந்து தாருமம்மா…
வாழ்க்கை இதைப் பாருமம்மா…
கேட்டதெல்லாம் நீ தருவாயே… தேவி… அம்மா…

BGM

ஆண் : கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா…
வாட்டமுள்ள பருவம்மா…
ஏ… கூட்டத்துல குனிஞ்சு நிக்கிற குருவம்மா…
வாட்டமுள்ள பருவம்மா…

ஆண் : ரெட்டமாட்டு வண்டியில் ஊருவலமா வருவம்மா…
சுத்தி திரிவம்மா…
பாட்டுப் படிச்சு பாலும் பழமும் தருவம்மா…

ஆண் : ரெட்டமாட்டு வண்டியில் ஊருவலமா வருவம்மா…
சுத்தி திரிவம்மா…
பாட்டுப் படிச்சு பாலும் பழமும் தருவம்மா…

பெண் : இஷ்டப்பட்டு சுத்தி வருகிற ராசரே…
என்ன பேச்சு பேசுற…
ஹோ… இஷ்டப்பட்டு சுத்தி வருகிற ராசரே…
என்ன பேச்சு பேசுற…

பெண் : நீ எதுக்கு இப்படி அரைச்ச சந்தனம் பூசுற மகராசரே…
மறந்த கதைய எடுத்து எடுத்து வீசுற…
நீ எதுக்கு இப்படி அரைச்ச சந்தனம் பூசுற மகராசரே…
மறந்த கதைய எடுத்து எடுத்து வீசுற…

BGM

ஆண் : ஹே… மல்லியப்பூ மணக்குற எடம் மதுரைதான்…
மாமன் ஏறும் குதுரைதான்…
அடியே மல்லியப்பூ மணக்குற எடம் மதுரைதான்…
மாமன் ஏறும் குதுரைதான்…

ஆண் : நீ சொல்லிய சொல்லுல துள்ளி வடியுது…
மதுரந்தான் நல்ல அதரந்தான்…
சொக்கிக் கெடக்குறேன் சொல்லடி நீ நல்ல வெவரந்தான்…

ஆண் : நீ சொல்லிய சொல்லுல துள்ளி வடியுது…
மதுரந்தான் நல்ல அதரந்தான்…
சொக்கிக் கெடக்குறேன் சொல்லடி நீ நல்ல வெவரந்தான்…

பெண் : துள்ளி வந்து தூபம் போடும் காளையே…
வேறயில்ல வேலையே…
ஹோ… துள்ளி வந்து தூபம் போடும் காளையே…
வேறயில்ல வேலையே…

பெண் : ஒரு புள்ளியை வச்சதும் சொல்லியேக் கட்டுறேன்…
மாலையே பட்டுச் சேலையே…
மல்லிகப்பூ ஒன்னு வந்து விழுகுறேன் மேலயே…

பெண் : ஒரு புள்ளியை வச்சதும் சொல்லியேக் கட்டுறேன்…
மாலையே பட்டுச் சேலையே…
மல்லிகப்பூ ஒன்னு வந்து விழுகுறேன் மேலயே…

BGM

ஆண் : கஷ்டப்பட்ட மனசைத் தேத்தப் பொறந்தவ…
கன்னிப் பொண்ணு சிறந்தவ…

ஆண் : ஹே…கஷ்டப்பட்ட மனசைத் தேத்தப் பொறந்தவ…
கன்னிப் பொண்ணு சிறந்தவ…

ஆண் : இந்தக் காளை மனசை நெனச்சு…
ஒலகை மறந்தவ விட்டுப் பறந்தவ…
கனவு முழுக்க நெறைஞ்சு சொகத்தக் கறந்தவ…

ஆண் : இந்தக் காளை மனசை நெனச்சு…
ஒலகை மறந்தவ விட்டுப் பறந்தவ…
கனவு முழுக்க நெறைஞ்சு சொகத்தக் கறந்தவ…

பெண் : பாவலரு வரதராசன் பாட்டுத்தான்…
ஆட வேணும் கேட்டுத்தான்…

ஆண் & பெண் : பாவலரு வரதராசன் பாட்டுத்தான்…
ஆட வேணும் கேட்டுத்தான்…

பெண் : அந்தப் பாட்டைப் படிக்க…
நமக்குக் கெடைக்கும் ஓட்டுத்தான்…
அதைப் போட்டுத்தான்…
எணைஞ்சு இருக்க வேணும் நமது கூட்டுத்தான்…

ஆண் & பெண் : அந்தப் பாட்டைப் படிக்க…
நமக்குக் கெடைக்கும் ஓட்டுத்தான்…
அதைப் போட்டுத்தான்…
எணைஞ்சு இருக்க வேணும் நமது கூட்டுத்தான்…


Notes : Kootathula Kuninchu Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai amaran. கூட்டத்தில குனுஞ்சி நிக்கிற பாடல் வரிகள்.


தென்றல் காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மனோஇளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Thendral Kaatre Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
மாமன் மொகத்த பாத்துதான்…
வந்து சேர சொல்ல மாட்டியா…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

BGM

ஆண் : முத்து மேனிதான் பட்டு ராணிதான்…
முழுதும் வாழும் யோகம்தான்…
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்…
தொடரும் எனது வேகம்தான்…

பெண் : நீயும் நானும் பாலும் தேனும்…
நீயும் நானும் பாலும் தேனும்…
போல ஒண்ணா கூடனும்…

ஆண் : வானம் போல பூமி போல…
சேர்ந்து ஒண்ணா வாழனும்…

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

BGM

பெண் : இந்த பூமியும் அந்த வானமும்…
இருக்கும்கோலம் மாறலாம்…
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்…
என்றும் மாற கூடுமோ…

ஆண் : காத்து வாழும் காலம் யாவும்…
காத்து வாழும் காலம் யாவும்…
காதல் கீதம் வாழுமே…

பெண் : கனவு கூட கவிதையாகி…
உனது புகழ பாடுமே…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

ஆண் : மாமன் மொகத்த பாத்துதான்…
பெண் : மணமால வந்து போடவா…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…


Notes : Thendral Kaatre Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. தென்றல் காத்தே பாடல் வரிகள்.


பூத்து பூத்து குலுங்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன்இளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Poothu Poothu Kulungudhadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…

பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே… ஹோய்…
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்… ஹோய்…

ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…

BGM

பெண் : வைக்காத செந்தூரம்தான்…
வச்சு வந்தேன் உன்னோடு நான்…
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம்தான்…

ஆண் : வண்டாடும் கண்ணோரம்தான்…
வஞ்சி இளம் பெண்ணோடு நான்…
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம்தான்…

பெண் : மொட்டானதே இளம் மேனி மேனி…
தொட்டாடவே வரும் மாமன் நீ…

ஆண் : மேளம் ஒரு இடி இடிக்குது…
வானம் புது குடை புடிக்குது…
வா வா வா மானே…

பெண் : பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…

ஆண் : ஒரு அச்சாரம்தான் வைக்காமலே… ஹோஹோ…
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்… ஹோஹோ…

ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…

BGM

ஆண் : பட்டோடு பொன்னாடத்தான்…
பார்த்த மனம் உன்னோடுதான்…
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே…

பெண் : தோளோடு தோளாகத்தான்…
மேலோடு மேலாகத்தான்…
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்…

ஆண் : செம்மேனியா செந்தாழம் பூவா…
அது உன்மேனியா ஹ பொன் மேனியா…

பெண் : பார்த்தா உடல் சிலு சிலுக்குது…
பார்வை பட கிளுகிளுக்குது…
வா வா வா..மாமா…

ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்…
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்…

பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே… ஹோய்…
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்… ஹோய்…

ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…
பூத்து பூத்து குலுங்குதடி பூவு…
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு…


Notes : Poothu Poothu Kulungudhadi Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. பூத்து பூத்து குலுங்குதடி பாடல் வரிகள்.


கூடலூரு குண்டுமல்லி 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ்.சித்ராஇளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Koodalooru Gundumalli Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

பெண் : கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

ஆண் : வாச கொத்தமல்லி… ஹோய்…
வாம்மா கொஞ்சம் தள்ளி…

பெண் : வாச கொத்தமல்லி… ஹோய்…
வந்தேன் கொஞ்சம் தள்ளி…

ஆண் : ஹே ஹே… கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

குழு : கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

BGM

ஆண் : மாங்கா மரத்துல மாங்காவ பாரு…
மாங்கா மறச்சு வச்ச தேரு…
தேங்கா ஒடைக்கல சேர்த்து அரைக்கல…
திங்காம திங்க வந்ததாரு…

பெண் : வாங்க என் மாப்பிள்ள வாடாத பூவு…
நோகாம தொட்டெடுத்து நீவு…
ஏங்கும் ஒடம்புல ஏக்கம் அடங்கல…
எப்போதும் விட்டு விட்டு தாவு…

ஆண் : அடி ஏல மல காட்டுக்குள்ள…
சோலை இருக்கு…
அந்த சோலையில வாடி புள்ள…
வேலை இருக்கு…

பெண் : அரே ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ…

குழு : கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…
கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

பெண் : வாச கொத்தமல்லி… ஹோய்…
வந்தேன் கொஞ்சம் தள்ளி…

ஆண் : வாச கொத்தமல்லி… ஹோய்…
வாம்மா கொஞ்சம் தள்ளி…

பெண் : கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

ஆண் : கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

குழு : ஆயாலோ ஆயாலோ…
ஆயலங்கடி ஆயாலோ…

BGM

குழு : அட டிய்யாலோ டிய்யாலோ…
டிய்யாலங்கடி டிய்யாலோ…

BGM

குழு : ஆயலங்கடி ஆயலங்கடி…
ஆயலங்கடி ஆயாலோ…
டிய்யாலங்கடி டிய்யாலங்கடி…
டிய்யாலங்கடி டிய்யாலோ…

BGM

பெண் : நாளான நாளுல ஆளானேன் நானு…
நான்தானே நல்ல கொம்பு தேனு…
ஏலானு சொல்லுங்க எங்கேயும்…
அள்ளுங்க எப்போதும் நானும் உங்க மானு…

ஆண் : மொட்டான மொட்டுல பித்தானேன் கேளு…
கொத்தாட இப்போ நல்ல நாளு…
சிட்டு சிரிப்புல ரெட்ட மடிப்புல…
சிவ்வின்னு தூக்குதம்மா மேலு…

பெண் : அட வாரத்துல ஓரத்துல சேந்துக்கிறவா…
ஒரு நேரத்துல வாரத்துல சேத்து தரவா…

ஆண் : அரே ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ…

பெண் : கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

ஆண் : கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி…

பெண் : வாச கொத்தமல்லி… ஹோய்…
வந்தேன் கொஞ்சம் தள்ளி… ஹா…

ஆண் : வாச கொத்தமல்லி… ஹோய்…
வாம்மா கொஞ்சம் தள்ளி…

குழு : கூடலூரு குண்டு மல்லி…
பெண் : ஹே…
குழு : வாட புடிக்க வந்த வள்ளி…
ஆண் : அஹா…

குழு : கூடலூரு குண்டு மல்லி…
பெண் : ஓஹோ…
குழு : வாட புடிக்க வந்த வள்ளி…
ஆண் : ஹேஹே…


Notes : Koodalooru Gundumalli Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. கூடலூரு குண்டுமல்லி  பாடல் வரிகள்.


பாட்டு உன்ன இழுக்குதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Pattu Onna Ilukkutha Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட்டு உன்ன இழுக்குதா…
குழு : ஆமா… ஆமா…
பெண் : அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா…
குழு : ஆமா… ஆமா…

பெண் : என்ன பூட்டி புடிச்சி வைக்க…
கூட்டு கிளியும் இல்ல…
காட்டு குயிலும் இல்ல…
கேட்டா கிறங்குதில்ல…
தந்தா நந்தா நந்தானா…

பெண் : பாட்டு உன்ன இழுக்குதா…
குழு : ஆமா… ஆமா…
பெண் : அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா…
குழு : ஆமா… ஆமா…

BGM

பெண் : நீரோடும் வைகையில நீரானவ…
நிமிந்து நடந்து வந்தா தேரானவ…
மாறாத வாக்கு சொல்லும் சீரானவ…
கருத்து எவரும் சொன்னா வேறானவ…

பெண் : செந்தாழம் பூ நல்லாருக்கும்…
தொட்டா முள்ளு குத்தாதா…
வந்தாலும்தான் போனாலும்தான்…
வண்டா கண்ணு சுத்தாதா…

பெண் : கொய்யாத கொய்யா கனி நான்தானடி…
கொண்டாட ஏங்கும் பல ஆண்தானடி…
ஏழூரிலும் என் போல பெண் ஏது…
எங்கே சொல்லு பெண்ணே இப்போது…

ஆண் : பாட்டு படிக்கும் குயிலே…
குழு : ஆமா… ஆமா…
ஆண் : உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே…
குழு : ஆமா… ஆமா…

ஆண் : கூட்டில் புடிச்சி வைப்பேன்…
வீட்டு கிளியே உன்ன…
காட்டில் தொரத்தி ரெண்டு…
போட்டு கிறங்க வைப்பேன்…
தந்தா நந்தா நந்தானா…

ஆண் : பாட்டு படிக்கும் குயிலே…
குழு : ஆமா… ஆமா…
ஆண் : உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே…
குழு : ஆமா… ஆமா…

ஆண் : ஏய்… ஏ… வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு…
இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு…
வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு…
இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு…

ஆண் : கத்தால முள்ளுதானா இல்ல…
கொட்டாத சிறு தேளா…
தந்தான கிளி தந்தான கிளி தந்தா நா…
அட தந்தான கிளி தந்தான கிளி தந்தா னா…

BGM

ஆண் : நீ என்ன தென்மதுரை அரசானியா…
நெசமாக வந்திருக்கும் அல்லி ராணியா…
நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா…
நடந்தா தங்கையா கிட்ட நடக்காதம்மா…

ஆண் : இல்லாததை பொல்லாததை…
எல்லாருக்கும் சொல்லாத…
எம்மா எம்மா சும்மா சும்மா…
அங்கே இங்கே துள்ளாதே…

ஆண் : பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம்…
முன்னோர்கள் சொன்னாரடி ஒரு வாக்கியம்…
வாயாடியே ஒம் போல பெண்ணாலே…
பெண்ணின் புகழ் மங்கும் தன்னாலே…

ஆண் : பாட்டு படிக்கும் குயிலே…
குழு : ஆமா… ஆமா…
ஆண் : உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே…
குழு : ஆமா… ஆமா…

ஆண் : கூட்டில் புடிச்சி வைப்பேன்…
வீட்டு கிளியே உன்ன…
காட்டில் தொரத்தி ரெண்டு…
போட்டு கிறங்க வைப்பேன்…
தந்தா நந்தா நந்தானா…

ஆண் : பாட்டு படிக்கும் குயிலே…
குழு : ஆமா… ஆமா…
ஆண் : உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே…
குழு : ஆமா… ஆமா…


Notes : Pattu Onna Ilukkutha Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. பாட்டு உன்ன இழுக்குதா பாடல் வரிகள்.