தென்றல் காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மனோஇளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Thendral Kaatre Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…
மாமன் மொகத்த பாத்துதான்…
வந்து சேர சொல்ல மாட்டியா…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…
கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

BGM

ஆண் : முத்து மேனிதான் பட்டு ராணிதான்…
முழுதும் வாழும் யோகம்தான்…
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்…
தொடரும் எனது வேகம்தான்…

பெண் : நீயும் நானும் பாலும் தேனும்…
நீயும் நானும் பாலும் தேனும்…
போல ஒண்ணா கூடனும்…

ஆண் : வானம் போல பூமி போல…
சேர்ந்து ஒண்ணா வாழனும்…

பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

BGM

பெண் : இந்த பூமியும் அந்த வானமும்…
இருக்கும்கோலம் மாறலாம்…
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்…
என்றும் மாற கூடுமோ…

ஆண் : காத்து வாழும் காலம் யாவும்…
காத்து வாழும் காலம் யாவும்…
காதல் கீதம் வாழுமே…

பெண் : கனவு கூட கவிதையாகி…
உனது புகழ பாடுமே…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…

ஆண் : மாமன் மொகத்த பாத்துதான்…
பெண் : மணமால வந்து போடவா…

ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே…
சேதி ஒண்ணு கேட்டியா…

பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு…
கோலம் போட்டா பாத்தியா…


Notes : Thendral Kaatre Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. தென்றல் காத்தே பாடல் வரிகள்.


Scroll to Top