பாட்டு உன்ன இழுக்குதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகும்பக்கரை தங்கய்யா

Pattu Onna Ilukkutha Song Lyrics in Tamil


BGM

பெண் : பாட்டு உன்ன இழுக்குதா…
குழு : ஆமா… ஆமா…
பெண் : அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா…
குழு : ஆமா… ஆமா…

பெண் : என்ன பூட்டி புடிச்சி வைக்க…
கூட்டு கிளியும் இல்ல…
காட்டு குயிலும் இல்ல…
கேட்டா கிறங்குதில்ல…
தந்தா நந்தா நந்தானா…

பெண் : பாட்டு உன்ன இழுக்குதா…
குழு : ஆமா… ஆமா…
பெண் : அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா…
குழு : ஆமா… ஆமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீரோடும் வைகையில நீரானவ…
நிமிந்து நடந்து வந்தா தேரானவ…
மாறாத வாக்கு சொல்லும் சீரானவ…
கருத்து எவரும் சொன்னா வேறானவ…

பெண் : செந்தாழம் பூ நல்லாருக்கும்…
தொட்டா முள்ளு குத்தாதா…
வந்தாலும்தான் போனாலும்தான்…
வண்டா கண்ணு சுத்தாதா…

பெண் : கொய்யாத கொய்யா கனி நான்தானடி…
கொண்டாட ஏங்கும் பல ஆண்தானடி…
ஏழூரிலும் என் போல பெண் ஏது…
எங்கே சொல்லு பெண்ணே இப்போது…

ஆண் : பாட்டு படிக்கும் குயிலே…
குழு : ஆமா… ஆமா…
ஆண் : உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே…
குழு : ஆமா… ஆமா…

ஆண் : கூட்டில் புடிச்சி வைப்பேன்…
வீட்டு கிளியே உன்ன…
காட்டில் தொரத்தி ரெண்டு…
போட்டு கிறங்க வைப்பேன்…
தந்தா நந்தா நந்தானா…

ஆண் : பாட்டு படிக்கும் குயிலே…
குழு : ஆமா… ஆமா…
ஆண் : உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே…
குழு : ஆமா… ஆமா…

ஆண் : ஏய்… ஏ… வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு…
இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு…
வித்தாரக்கள்ளி இவள கொஞ்சம் பாரு…
இவ தொட்டா உடம்பில் ஒட்டிக்கொள்ளும் சேறு…

ஆண் : கத்தால முள்ளுதானா இல்ல…
கொட்டாத சிறு தேளா…
தந்தான கிளி தந்தான கிளி தந்தா நா…
அட தந்தான கிளி தந்தான கிளி தந்தா னா…

BGM

ஆண் : நீ என்ன தென்மதுரை அரசானியா…
நெசமாக வந்திருக்கும் அல்லி ராணியா…
நான் என்ற எண்ணம் கொண்டு நடக்காதம்மா…
நடந்தா தங்கையா கிட்ட நடக்காதம்மா…

ஆண் : இல்லாததை பொல்லாததை…
எல்லாருக்கும் சொல்லாத…
எம்மா எம்மா சும்மா சும்மா…
அங்கே இங்கே துள்ளாதே…

ஆண் : பெண்ணாக வந்தாலே பெரும் பாக்கியம்…
முன்னோர்கள் சொன்னாரடி ஒரு வாக்கியம்…
வாயாடியே ஒம் போல பெண்ணாலே…
பெண்ணின் புகழ் மங்கும் தன்னாலே…

ஆண் : பாட்டு படிக்கும் குயிலே…
குழு : ஆமா… ஆமா…
ஆண் : உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே…
குழு : ஆமா… ஆமா…

ஆண் : கூட்டில் புடிச்சி வைப்பேன்…
வீட்டு கிளியே உன்ன…
காட்டில் தொரத்தி ரெண்டு…
போட்டு கிறங்க வைப்பேன்…
தந்தா நந்தா நந்தானா…

ஆண் : பாட்டு படிக்கும் குயிலே…
குழு : ஆமா… ஆமா…
ஆண் : உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே…
குழு : ஆமா… ஆமா…


Notes : Pattu Onna Ilukkutha Song Lyrics in Tamil. This Song from Kumbakarai Thangaiah (1991). Song Lyrics penned by Gangai Amaran. பாட்டு உன்ன இழுக்குதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading