Category Archives: எதிர்காற்று

எதிர்காற்று – Ethir Kaatru (1990)

நீ உள்ள பொறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஎதிர்காற்று

Nee Ulla Poranthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

ஆண் : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : சுட்ட சட்டி மேல…
கொஞ்சம் உப்ப போட்டு பாரு…
அது சத்தம் போட்டு வெடிக்கும்…
அந்த சத்தம் நீயும் கேளு…

ஆண் : வெட்டிப் பைய பேச்சு…
அதை வேதம் போல நெனச்சு…
மட்டிப் பைய கேட்டு…
அவன் கெட்டுப் போறான் எளசு…

ஆண் : காட்டில் கதிர் அறுத்து…
கஷ்டப் படும் ஏழைக்கு…
நாட்டில் ஒருத்தன் வந்து…
தாகம் தீர்த்து வெச்சானா…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
கூழுக்கு அழுகதான்…
கட்டாந்தரையில் மொட்டச் சுவத்தில்…
ஏழைங்க பொழப்புதான்…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

BGM

ஆண் : ராமன் பொறந்த போது…
கெட்ட ராவணனும் இருந்தான்…
கண்ணன் இருந்த போது…
அங்கு கம்சனும் கூட இருந்தான்…

ஆண் : பாண்டவர்கள் இருந்தா…
அங்கு கௌரவரும் இருப்பார்…
காந்தி வாழ்ந்த நாட்டில்…
அந்த கோட்சேயும் தான் இருப்பான்…

ஆண் : ஊரெல்லாம் ராவணன்தான்…
ராமன் இங்கே யாரும் இல்லே…
நாடெல்லாம் கோட்சேகள்தான்…
காந்தி இங்கே யாரும் இல்லே…

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்…
நல்லது கெட்டதுண்டு…
எக்காலத்திலும் கெட்டாலும்…
அந்தக் கெட்டத விட்டுத் தள்ளு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்…
கெட்டுப் போய்த் துள்ளுது…
உள்ள இருப்பதுதான்…
இப்ப ரொம்ப நல்லது…

குழு : அடிச்சுப் பாடு…
கும்மி அடிச்சுப் பாடு…
ஏ புடிச்சுப் போடு…
தாளம் புடிச்சுப் போடு…

குழு : நீ உள்ள பொறந்து வெளியே போனே…
கண்ண பிரானே…
நாங்க வெளியே பொறந்து உள்ள வந்தோம்…
கண்ண பிரானே…


Notes : Nee Ulla Poranthu Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. நீ உள்ள பொறந்து பாடல் வரிகள்.


இங்கு இருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil


பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

BGM

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : மான் தரும் பொன் தூறலில்…
மாமலை பூஞ்சாரலில்…
சுகம் என நான் நனைகிறேன்…

பெண் : ஓ ராத்திரி நிலாவினில்…
பூத்திடும் கனாவினில்…
கவிதைகள் நான் புனைகிறேன்…

பெண் : தென்னங்கீற்றும் தென்னிசைக் காற்றும்…
அன்பின் வேதம் கூறாதா…
அன்பின் வேதம் கேட்டதனாலே…
துன்பம் யாவும் தீராதா…

பெண் : பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும்…
மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால்

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : தேசமே என் பூவனம்…
பாசமே என் கீர்த்தனம்…
உலகமே என் உறவினம்…

பெண் : ஓ… வேர்வையும் கண்ணீரையும்…
பார்க்கையில் எவ்வேளையும்…
உருகுமே என் இளமனம்…

பெண் : வேணிற் காலம் வந்தது என்று…
வானம் பாடி பாடாதோ…
வாசல் தேடி வெயிலும் வந்து…
வண்ணக் கோலம் போடாதோ…

பெண் : ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும்…
பல வருஷம் பேச வேண்டும்…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…


Notes : Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. இங்கு இருக்கும் பாடல் வரிகள்.


ராஜா இல்லா ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil


BGM

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

பெண் : ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

BGM

ஆண் : நட்பு எனும் ஏடெடுத்து…
நான் வரைந்த முதல் எழுத்து…
உன்னை அன்றி யாரும் இல்லை ஊரிலே…

பெண் : எத்தனையோ கோயில் கொண்டு…
இங்கிருக்கும் தெய்வம் உண்டு…
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே…

ஆண் : சின்ன மலர்க் காவலுக்கு…
என்றிருந்த தென்றலுக்கு…
விட்டு விலகும் பொழுதும் வந்ததே…

பெண் : ஆசையாய் பூவிடு வாய் வராத…
ஊமைக் குயில் போல நானும் வாழ்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

BGM

ஆண் : இங்கிருந்த காலங்களும்…
அன்பு கொண்ட கோலங்களும்…
எப்பொழுதும் வாழும் இந்த கண்ணிலே…

பெண் : என்னுடைய எண்ணங்களும்…
கற்பனையின் வண்ணங்களும்…
என்னவென்று நானும் சொல்ல சொல் இல்லே…

ஆண் : நல்ல மனம் கொண்டிருக்கும்…
நங்கை விழி கண்டிருக்கும்…
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா…

பெண் : வானம் போல் உன் மனம்…
பால் நிலாவைப் போல அதில்…
நானும் வாழப் பார்க்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

ஆண் : ஒரு தேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே… ஓஓஒ…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…


Notes : Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. ராஜா இல்லா ராணி பாடல் வரிகள்.


சாமியாரா போனவனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஎதிர்காற்று

Saamiyaara Ponavanukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

ஆண் : ஆஹா… இக்கரைக்குத்தான் அந்த அக்கரை பச்சை…
அட அக்கரைக்கு இக்கரை பச்சை…
நாம இங்க இருந்தா அது அங்க இழுக்கும்…
அட எங்கேயுமே ஏதும் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

BGM

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு…
சாவு ஒரு கடைசியல்ல… ஆ…
சாக நெனச்சா அது கையில இல்லை…
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை…

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு…
சாவு ஒரு கடைசியல்ல…
குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : சாக நெனச்சா அது கையில இல்லை…
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை…
குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : ஆத்தங்கரை ஓரம்…
நீ முதலில் குளிக்கும் தண்ணி…
அடுத்த மொற போனா…
அது வேற புதுத் தண்ணி…

ஆண் : பொறந்து பொறந்து சாகும்…
அது செத்து செத்து பொழைக்கும்…
தெனமும் தெனமும் நடந்தும்…
இது மறந்து மறந்து போகும்…
இந்த ஒலகத்திலே வாழ்வதிலே அர்த்தம் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

BGM

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த…
எத்தனை பேர் பொறந்து வந்தான்…
தத்துவங்கள எழுதி வச்சு…
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்…

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த…
எத்தனை பேர் பொறந்து வந்தான்…
குழு : ஆஅ ஹா ஹா ஹா…

ஆண் : தத்துவங்கள எழுதி வச்சு…
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்…
குழு : ஆஅ ஹா ஹா ஹா…

ஆண் : முழிச்சிருக்கும் வாழ்க்க…
ஒரு கனவப் போல தம்பி…
இதில் தூக்கத்திலே சொர்க்கம்…
அது எங்க வரும் அம்பி…

ஆண் : உருட்டி உருட்டிப் பாரு…
இது நாய் கையில் தேங்கா…
உழுது பயிரப் போடு…
இது பாறை நெலத்துப் பூங்கா…
அதில் உழுவதிலே அழுவதிலே அர்த்தம் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

ஆண் : ஆஹா… இக்கரைக்குத்தான் அந்த அக்கரை பச்சை…
அட அக்கரைக்கு இக்கரை பச்சை…
நாம இங்க இருந்தா அது அங்க இழுக்கும்…
அட எங்கேயுமே ஏதும் இல்லடா…

குழு : ஹே ஹே…
ஆண் : சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
குழு : ஹேய் ஹேய்…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹோய் ஹோய்…


Notes : Saamiyaara Ponavanukku Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. சாமியாரா போனவனுக்கு பாடல் வரிகள்.


கூண்டைவிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே .ஜே. யேசுதாஸ்இளையராஜாஎதிர்காற்று

Koondai Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…

ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…

BGM

ஆண் : நான் வளர்க்கும் பூச்செடியில்…
முட்கள் மட்டும் பூப்பதென்ன…
பாவமா சாபமா காலத்தின் கோலமா…

ஆண் : கால் நடக்கும் பாதை எல்லாம்…
கற்கள் குத்தி வலிப்பதென்ன…
யார் இதன் காரணம் தெய்வம்தான் கூறணும்…

ஆண் : வைரக் கல்லை நான் கொடுத்தால்…
வாங்கிக் கொள்ளும் உலகமே…
உப்புக் கல்லை எனக்களித்து…
ஒப்புக் கொள்ளச் சொல்லுமே…

ஆண் : நெய்யை விட்டு தீபம் ஏற்றினால்…
கையைச் சுட்டு நன்றி காட்டுதே… ஓ…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…

ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…

BGM

ஆண் : தெய்வத்துக்கு ஆறு முகம்…
மானிடர்க்கு நூறு முகம்…
மெய் எது பொய் எது யார் அதைக் கண்டது…

ஆண் : பாலும் இங்கு வெள்ளை நிறம்…
கள்ளும் இங்கு வெள்ளை நிறம்…
பால் எது கள் எது பேதம் யார் கண்டது…

ஆண் : நேசம் வைத்த யாருக்குமே…
நெஞ்சம் எல்லாம் காயம்தான்…
பாசம் வைத்த கண்களிலே…
பார்ப்பதெல்லாம் மாயம்தான்…

ஆண் : ஏறிச் சென்ற கால்கள் உதைக்குது…
ஏற்றிவிட்ட ஏணி சிரிக்குது… ஓ…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…

ஆண் : பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…

ஆண் : கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…


Notes : Koondai Vittu Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. கூண்டைவிட்டு பாடல் வரிகள்.