சாமியாரா போனவனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஎதிர்காற்று

Saamiyaara Ponavanukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

ஆண் : ஆஹா… இக்கரைக்குத்தான் அந்த அக்கரை பச்சை…
அட அக்கரைக்கு இக்கரை பச்சை…
நாம இங்க இருந்தா அது அங்க இழுக்கும்…
அட எங்கேயுமே ஏதும் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

—BGM—

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு…
சாவு ஒரு கடைசியல்ல… ஆ…
சாக நெனச்சா அது கையில இல்லை…
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை…

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு…
சாவு ஒரு கடைசியல்ல…
குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : சாக நெனச்சா அது கையில இல்லை…
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை…
குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : ஆத்தங்கரை ஓரம்…
நீ முதலில் குளிக்கும் தண்ணி…
அடுத்த மொற போனா…
அது வேற புதுத் தண்ணி…

ஆண் : பொறந்து பொறந்து சாகும்…
அது செத்து செத்து பொழைக்கும்…
தெனமும் தெனமும் நடந்தும்…
இது மறந்து மறந்து போகும்…
இந்த ஒலகத்திலே வாழ்வதிலே அர்த்தம் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

—BGM—

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த…
எத்தனை பேர் பொறந்து வந்தான்…
தத்துவங்கள எழுதி வச்சு…
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்…

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த…
எத்தனை பேர் பொறந்து வந்தான்…
குழு : ஆஅ ஹா ஹா ஹா…

ஆண் : தத்துவங்கள எழுதி வச்சு…
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்…
குழு : ஆஅ ஹா ஹா ஹா…

ஆண் : முழிச்சிருக்கும் வாழ்க்க…
ஒரு கனவப் போல தம்பி…
இதில் தூக்கத்திலே சொர்க்கம்…
அது எங்க வரும் அம்பி…

ஆண் : உருட்டி உருட்டிப் பாரு…
இது நாய் கையில் தேங்கா…
உழுது பயிரப் போடு…
இது பாறை நெலத்துப் பூங்கா…
அதில் உழுவதிலே அழுவதிலே அர்த்தம் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

ஆண் : ஆஹா… இக்கரைக்குத்தான் அந்த அக்கரை பச்சை…
அட அக்கரைக்கு இக்கரை பச்சை…
நாம இங்க இருந்தா அது அங்க இழுக்கும்…
அட எங்கேயுமே ஏதும் இல்லடா…

குழு : ஹே ஹே…
ஆண் : சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
குழு : ஹேய் ஹேய்…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹோய் ஹோய்…


Notes : Saamiyaara Ponavanukku Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. சாமியாரா போனவனுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading