ராஜா இல்லா ராணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

பெண் : ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

—BGM—

ஆண் : நட்பு எனும் ஏடெடுத்து…
நான் வரைந்த முதல் எழுத்து…
உன்னை அன்றி யாரும் இல்லை ஊரிலே…

பெண் : எத்தனையோ கோயில் கொண்டு…
இங்கிருக்கும் தெய்வம் உண்டு…
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே…

ஆண் : சின்ன மலர்க் காவலுக்கு…
என்றிருந்த தென்றலுக்கு…
விட்டு விலகும் பொழுதும் வந்ததே…

பெண் : ஆசையாய் பூவிடு வாய் வராத…
ஊமைக் குயில் போல நானும் வாழ்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…

—BGM—

ஆண் : இங்கிருந்த காலங்களும்…
அன்பு கொண்ட கோலங்களும்…
எப்பொழுதும் வாழும் இந்த கண்ணிலே…

பெண் : என்னுடைய எண்ணங்களும்…
கற்பனையின் வண்ணங்களும்…
என்னவென்று நானும் சொல்ல சொல் இல்லே…

ஆண் : நல்ல மனம் கொண்டிருக்கும்…
நங்கை விழி கண்டிருக்கும்…
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா…

பெண் : வானம் போல் உன் மனம்…
பால் நிலாவைப் போல அதில்…
நானும் வாழப் பார்க்கிறேன்…

ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்… ஓஒ…
பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…

ஆண் : ஒரு தேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே… ஓஓஒ…

பெண் : ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ஆண் : ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…


Notes : Raja Illa Rani Endrum Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. ராஜா இல்லா ராணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading