தம்பி நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Thambi Nee Nimindhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

—BGM—

ஆண் : கட்சி எல்லாம் உண்மையிலே…
ஏழைக்காக பாடு பட்டா…
ஏழையே இருக்க மாட்டான்டா…

குழு : இந்தியாவில் ஏழையே இருக்க மாட்டான்டா…

ஆண் : தலைவருக்கு நாட்டினிலே…
எத்தனையோ வேலை உண்டு…
ஒன்ன எவன் பாக்கப் போறான்டா…

குழு : அட வெட்டி வேல உன்ன எவன்…
பாக்கப் போறான்டா…

ஆண் : அவன பாத்து இவன பாத்து…
ஒன்ன மறந்துட்ட…
அட வேடிக்கைய பாத்துப் பாத்து…
வீட்ட மறந்துட்ட…

ஆண் : உண்மை சொன்னா அவன மட்டும்…
கண்டுக்கமாட்ட…
அட ஒன்ன ஏய்க்கும் தலைவனெல்லாம்…
தண்டிக்கமாட்ட…
நீதான் தண்டிக்கமாட்ட…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

குழு : தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…

ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான்…
அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல…
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…
எலும்பும் தோலுமாய் இருக்கும்…
என் உயிர்த் தோழா…

ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா…
தலைய நிமுந்து பாருடா…


Notes : Thambi Nee Nimindhu Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. தம்பி நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading