ஏய் ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாஎன் உயிர்த் தோழன்

Yeraasaathi Song Lyrics in Tamil


குழு : ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ஏய் ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி…
ஜும்ஜும்சும் ஜும்ஜும்சும் ராசாத்தி…

குழு : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி…

குழு : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…

—BGM—

ஆண் : கண்கள் இமை மூடும் போதும்…
உனதன்பு எனதன்பைத் தேடும்…
குழு : அடடடா…

ஆண் : மஞ்சம் இரண்டான போதும்…
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்…
குழு : அடடடா…

ஆண் : தூர இருந்தும்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : அருகில் இருப்போம்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…

ஆண் : தனித்து இருந்தும்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…
ஆண் : இணைந்தே இருப்போம்…
குழு : ஹாஆஅ… ஆஅஆஅ…

—BGM—

குழு : ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்…
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட…
ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்…
நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட…

குழு : மின்னும் வெள்ளி மீன்களை மேனி எங்கும் சூடுவேன்…
மேடை என்னும் தேவியை ஆடை என்று மூடுவேன்…
அங்கம் எங்கும் தங்கம்…
ஹே எங்கும் இன்பம் பொங்கும்…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

—BGM—

ஆண் : பந்தலிட்டு பரிசம் போட்டு…
சொந்தம் கூடி நாள் குறிக்க…

குழு : பந்தலிட்டு பரிசம் போட்டு…
சொந்தம் கூடி நாள் குறிக்க…

ஆண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து…
மங்கல வாத்தியம் மந்திரம் முழங்க…
மஞ்சள் கயிறு மணிக் கழுத்தில்…
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்…

—BGM—

குழு : வான்வெளியில் பூ விரித்து…
காண்போம் முதல் இரவு…
தேன் மொழியில் இசைதான் கலந்து…
படிப்போம் இணைந்திருந்து…

குழு : வான்வெளியில் பூ விரித்து…
காண்போம் முதல் இரவு…
தேன் மொழியில் இசைதான் கலந்து…
படிப்போம் இணைந்திருந்து…

குழு : வானும் இந்த பூமியும்…
நானும் தந்தேன் சீதனம்…
கையில் வந்த பூவுடல்…
காதல் மலர்ப் பூ வனம்…

குழு : கண்ணே காதல் பெண்ணே…
காமன் கோயில் வாசல் முன்னே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…

குழு : தேவதையே திருமகளே…
தேவதையே திருமகளே…
மாங்கனியே மணமகளே…
மாலை சூடும் குணமகளே…

ஆண் : ஏ ராசாத்தி ரோசாப் பூ வா வா வா…
குழு : தனனா…
ஆண் : அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா…
குழு : தனனனனனா…


Notes : Yeraasaathi Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ராசாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading