மண்ணுக்கும் விண்ணுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பட்டுக்கோட்டை முருகதாசன்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Mannukkum Vinnukkum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…

ஆண் : மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…

—BGM—

ஆண் : குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ…
குளிர் வீசி வரும் தென்றல் இசை நீயன்றோ…
குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ…
குளிர் வீசி வரும் தென்றல் இசை நீயன்றோ…

ஆண் : மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ…
மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ…
என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ…
ஒளி நீயன்றோ…

ஆண் : மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…

—BGM—

ஆண் : பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ முருகா…
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ…
பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ முருகா…
பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ…

ஆண் : பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ…
பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ…
தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ…
பொருள் நீயன்றோ…

ஆண் : மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து…
மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து…
கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்…
கந்தனே நீ ஒரு கற்கண்டு…

—BGM—


Notes : Mannukkum Vinnukkum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Pattukkottai Murugadasan. மண்ணுக்கும் விண்ணுக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading