அழகென்ற சொல்லுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கோவை கூத்தன்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Azhagendra Sollukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முருகா… முருகா…

—BGM—

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…
அழகென்ற சொல்லுக்கு முருகா…
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…

—BGM—

ஆண் : சுடராக வந்த வேல் முருகா…
கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா…
சுடராக வந்த வேல் முருகா…
கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா…

ஆண் : கனிக்காக மனம் நொந்த முருகா…
கனிக்காக மனம் நொந்த முருகா…
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…

—BGM—

ஆண் : ஆண்டியாய் நின்ற வேல் முருகா…
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா…
ஆண்டியாய் நின்ற வேல் முருகா…
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா…

ஆண் : பழம் நீ அப்பனே முருகா…
பழம் நீ அப்பனே முருகா…
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…

—BGM—

ஆண் : குன்றாறும் குடிகொண்ட முருகா…
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா…
குன்றாறும் குடிகொண்ட முருகா…
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா…

ஆண் : சக்தி உமை பாலனே முருகா…
சக்தி உமை பாலனே முருகா…
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…

—BGM—

ஆண் : ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா…
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா…
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா…
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா…

ஆண் : அரகரா சண்முகா முருகா…
அரகரா சண்முகா முருகா…
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…

ஆண் : அன்பிற்கு எல்லையோ முருகா…
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா…
அன்பிற்கு எல்லையோ முருகா…
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா…

ஆண் : கண்கண்ட தெய்வமே முருகா…
கண்கண்ட தெய்வமே முருகா…
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா…

ஆண் : அழகென்ற சொல்லுக்கு முருகா…
முருகா முருகா முருகா…

—BGM—


Notes : Azhagendra Sollukku Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kovai Koothan. அழகென்ற சொல்லுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading