திருப்பதி வந்தா திருப்பம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஷங்கர் மகாதேவன்பரத்வாஜ்திருப்பதி

Thirupathi Vantha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திருப்பதி வந்தா திருப்பம்…
தீப்பொறி போல இருக்கும்…
திருப்பதி வந்தா திருப்பம்…
தீப்பொறி போல இருக்கும்…

ஆண் : உனக்கு மேல எனக்கு மேல யாரு பாருடா…
உன்ன என்ன வாழ வச்ச சாமிதானடா…
வாழ்க்கையில வாழ்க்கையில நூறு பாடம்டா…
கத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா…

ஆண் : சுட்டாதான் நெருப்பு…
பட்டாதான் பொறுப்பு…

ஆண் : ஹோய்… சுட்டாதான் நெருப்பு…
பட்டாதான் பொறுப்பு…
மனுசனுக்கு கிறுக்கு…
மனசுக்குள்ள இருக்கு…
திருப்பதி வந்தா…

ஆண் : ஹே… திருப்பதி வந்தா திருப்பம்…
தீப்பொறி போல இருக்கும்…

—BGM—

ஆண் : நாளுக்கு நாளு உழைச்சித்தான் பாரு…
அதுதான் திருநாளு…
தூங்குற நேரம் ஏங்குற நேரம்…
வாழ்கையில் சேராது…

—BGM—

ஆண் : ஹேய்… நாளுக்கு நாளு உழைச்சித்தான் பாரு…
அதுதான் திருநாளு…
தூங்குற நேரம் ஏங்குற நேரம்…
வாழ்கையில் சேராது…

ஆண் : வேலை வெட்டி இல்லையினா…
வேட்டி கட்டி பலனில்லைடா…
வாய கட்டி வயித்த கட்டி…
சேத்த பணம் உனக்கில்லைடா…

ஆண் : எடுக்கிற வாழ்க்கை பெரும்பாவம்டா…
கொடுக்கிற வாழ்க்கை வரம்தானடா…
தான் தான்னு நெனச்சா அகம்பாவம்டா…
நான்தான்னு நெனச்சா எதிர் காலம்டா…

ஆண் : வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா…
ஏழை நம்மை வாழ வைக்கும்…

ஆண் : திருப்பதி வந்தா…
குழு : திருப்பதி வந்தா திருப்பம்…
தீப்பொறி போல இருக்கும்…

—BGM—

ஆண் : வேருக்கு நீரு ஊத்திதான் பாரு…
பூக்களில் உன் பேரு…
வாழைக்கு தாரு ஏழைக்கு சோறு…
இல்லேன்னா மதிப்பேது…

—BGM—

ஆண் : வேருக்கு நீரு ஊத்திதான் பாரு…
பூக்களில் உன் பேரு…
வாழைக்கு தாரு ஏழைக்கு சோறு…
இல்லேன்னா மதிப்பேது…

ஆண் : போர்வைக்குள்ள வாழ்ந்தாலுமே எந்நாளும் கோளாருடா
போராடியே வாழ்ந்துபுட்டா அது சொல்லும் வரலாறுடா…

ஆண் : சொந்த பந்த வரவ நெனைக்காதடா…
சொந்த காலு மட்டும் உறவாகும்டா…
பேருக்கு வாழ்ந்தா நீ யாருடா…
திருப்பதி சொன்னா தகராறுடா…

ஆண் : வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா…
ஏழை நம்மை வாழ வைக்கும்…

ஆண் : திருப்பதி வந்தா திருப்பம்…
தீப்பொறி போல இருக்கும்…
திருப்பதி வந்தா திருப்பம்…
தீப்பொறி போல இருக்கும்…

ஆண் : உனக்கு மேல எனக்கு மேல யாரு பாருடா…
உன்ன என்ன வாழ வச்ச சாமிதானடா…
வாழ்க்கையில வாழ்க்கையில நூறு பாடம்டா…
கத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா…

ஆண் : சுட்டாதான் நெருப்பு…
பட்டாதான் பொறுப்பு…

ஆண் : ஹோய்… சுட்டாதான் நெருப்பு…
பட்டாதான் பொறுப்பு…
மனுசனுக்கு கிறுக்கு…
மனசுக்குள்ள இருக்கு…

ஆண் : திருப்பதி வந்தா…

குழு : திருப்பம் வந்தா திருப்பம்…
தீப்பொறி போல இருக்கும்…
திருப்பதி வந்தா திருப்பம்…
தீப்பொறி போல இருக்கும்…


Notes : Thirupathi Vantha Song Lyrics in Tamil. This Song from Thirupathi (2006). Song Lyrics penned by Perarasu. திருப்பதி வந்தா திருப்பம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading