Category Archives: கந்தன் கருணை

கந்தன் கருணை – Kandhan Karunai (1967)

திருப்பரங்குன்றத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பூவை செங்குட்டுவன்ராஜலட்சுமி & பி. சுசீலாகே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Thirupparang Kundrathil Song Lyrics in Tamil


BGM

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…
திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம்…
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…
பழநியிலே இருக்கும் கந்தப் பழம்…
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…

பெண் : பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்…
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்…
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு…
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு…
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…

பெண் : உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…


Notes : Thirupparang Kundrathil Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Poovai Senguttuvan. திருப்பரங்குன்றத்தில் பாடல் வரிகள்.


வெள்ளி மலை மன்னவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கரதாஸ் சுவாமிகள்எஸ். வரலட்சுமிகே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Vellimalai Mannava Song Lyrics in Tamil


பெண் : வெள்ளி மலை மன்னவா…
வேதம் நீ அல்லவா…
வெள்ளி மலை மன்னவா…
வேதம் நீ அல்லவா…

பெண் : முன்னோர்க்கும் முன்னவா…
மூண்ட கதை சொல்லவா…
முன்னோர்க்கும் முன்னவா…
மூண்ட கதை சொல்லவா…

பெண் : வெள்ளி மலை மன்னவா…

BGM

பெண் : வானுலகம் விழுவதென வானவர்தான் அழுவதென்ன…
வானுலகம் விழுவதென வானவர்தான் அழுவதென்ன…
சேனை அசுரர் குலம் செயல் கொடிந்தான் கொள்வதென்ன…
சேனை அசுரர் குலம் செயல் கொடிந்தான் கொள்வதென்ன…

பெண் : தேவர் குரல் கேட்டு…
உன் திருவடியைக் காட்டு…

BGM

பெண் : அபயக் கரம் நீட்டு
உன் அருள் முகத்தை காட்டு

BGM

பெண் : தேவர் குரல் கேட்டு…
உன் திருவடியைக் காட்டு…
அபயக் கரம் நீட்டு…
உன் அருள் முகத்தை காட்டு…

BGM

பெண் : வெள்ளி மலை மன்னவா…
வேதம் நீ அல்லவா…
முன்னோர்க்கும் முன்னவா…
மூண்ட கதை சொல்லவா…

பெண் : வெள்ளி மலை மன்னவா…


Notes : Vellimalai Mannava Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Sankaradas Swamikal. வெள்ளி மலை மன்னவா பாடல் வரிகள்.


வெற்றிவேல் வீரவேல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Vetrivel Veeravel Song Lyrics in Tamil


ஆண் : வெற்றிவேல் வீரவேல்…
வெற்றிவேல் வீரவேல்…
வெற்றிவேல் வீரவேல்…

BGM

ஆண் : வெற்றிவேல் வீரவேல்…
சுற்றி வந்த பகைவர் தம்மை…
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்…
ஞான சக்திவேல்…

ஆண் : வெற்றிவேல் வீரவேல்…
சுற்றி வந்த பகைவர் தம்மை…
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்…
ஞான சக்திவேல்…

ஆண் : வெற்றிவேல் வீரவேல்…

BGM

ஆண் : ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல்…
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்…
ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல்…
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல்…

ஆண் : மோதி அந்த குன்றழித்த சக்திவேல்…
மோதி அந்த குன்றழித்த சக்திவேல்…
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்…
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல்…

ஆண் : வெற்றிவேல் வீரவேல்…
சுற்றி வந்த பகைவர் தம்மை…
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்…
ஞான சக்திவேல்…

ஆண் : வெற்றி வேல் வீரவேல்…

BGM

ஆண் : தெய்வம் உண்டு தெய்வம் உண்டு…
என்று சொல்லும் வெற்றிவேல்…
தெய்வ பக்தி உள்ளவர்க்கு…
கை கொடுக்கும் வீரவேல்…

ஆண் : தெய்வம் உண்டு தெய்வம் உண்டு…
என்று சொல்லும் வெற்றிவேல்…
தெய்வ பக்தி உள்ளவர்க்கு…
கை கொடுக்கும் வீரவேல்…

ஆண் : எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில்…
வந்து நின்ற வேல்…
எய்த பின்பு மீண்டும் கந்தன் கையில்…
வந்து நின்ற வேல்…

ஆண் : எங்கும் வெற்றி எதிலும் வெற்றி…
காணும் எங்கள் சக்திவேல்…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி…
காணும் எங்கள் சக்திவேல்…

ஆண் : வெற்றிவேல் வீரவேல்…
சுற்றி வந்த பகைவர் தம்மை…
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்…
ஞான சக்திவேல்…

ஆண் : வெற்றிவேல்… வீரவேல்…


Notes : Vetrivel Veeravel Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Kannadasan. வெற்றிவேல் வீரவேல் பாடல் வரிகள்.


அரியது கேட்கின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி. சுந்தரம்பாள்கே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Ariyathu Ketkin Song Lyrics in Tamil


ஆண் : ஔவையே உலகில் அரியது என்ன…

பெண் : அரியது கேட்கின் வரிவடிவேலோய்…
அரிது அரிது மானிடராதல் அரிது…
மானிடராயினும் கூன் குருடு…
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…

பெண் : கூன் குருடு செவிடு பேடு…
நீங்கிப் பிறந்த காலையும்…
ஞானமும் கல்வியும் நயத்தலரிது…

பெண் : ஞானமும் கல்வியும் நயந்த காலையும்…
தானமும் தவமும்தான் செய்தல் அரிது…
தானமும் தவமும்தான் செய்வராயின்…
வானவர் நாடு வழி பிறந்திடுமே…

ஆண் : அரியது கேட்டமைக்கு அழகான தமிழில்…
விளக்கம் தந்த மூதாட்டியே கொடியது என்ன…

பெண் : கொடியது கேட்கின் வரிவடிவேலோய்…
கொடிது கொடிது வறுமை கொடிது…
அதனினும் கொடிது இளமையில் வறுமை…

பெண் : அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடு நோய்…
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்…
அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பதுதானே…

ஆண் : மிக்க மகிழ்ச்சி…
சொல்லால் தமிழால் வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்…
திறமை படைத்த ஔவையே பெரியது என்ன…

பெண் : பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்…
பெரிது பெரிது புவனம் பெரிது…
புவனமும் நான் முகன் படைப்பு…
நான்முகன் கரியமால் முந்தியில் வந்தோன்…

பெண் : கரியமாலோ அலைகடல் துயின்றோன்…
அலைகடலோ குருமுனி யங்கையில் அடக்கம்…
குருமுனியோ கலசத்துப் பிறந்தோன்…
கலசமோ புவியிற் சிறுமண்…
புவியோ அரவினிக் ஒரு தலைப் பாரம்…
அரமோ உமையவள் சிறு விரல் மோதிரம்…

பெண் : உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்…
இறைவனோ தொண்டர் உள்ளத்தொடுக்கம்…
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே…

ஆண் : ஔவையே… வானவரும் உனது வாக்கிற்கு…
அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை…
இனியது என்ன…

பெண் : இனியது கேட்கின் தனி நெடுவேலோய்…
இனிது இனிது ஏகாந்த்தம் இனிது…
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்…

பெண் : அதனினும் இனிது அறிவினர் சேர்தல்…
அதனினும் இனிது அறிவுள்ளோரை…
கனவிலும் நனவிலும் காண்பதுதானே…

ஆண் : அரியது கொடியது பெரியது இனியது…
அனைத்திற்கும் முறையோடு விடை பகன்ற ஔவையே…
புதியது என்ன…

பெண் : என்றும் புதியது…
பாடல் என்றும் புதியது…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…

பெண் : முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…
முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…

பெண் : அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்…
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…

பெண் : அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்…
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…

பெண் : முருகன் என்ற பெயரில் வந்த…
அழகே என்றும் புதியது…
முருகன் என்ற பெயரில் வந்த…
அழகே என்றும் புதியது…

பெண் : முறுவல் காட்டும் குமரன் கொண்ட…
இளமை என்றும் புதியது…
முறுவல் காட்டும் குமரன் கொண்ட…
இளமை என்றும் புதியது…

பெண் : உன்னைப் பெற்ற அன்னையர்க்கு…
உனது லீலை புதியது…
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு…
உனது லீலை புதியது…

பெண் : உனது தந்தை இறைவனுக்கும்…
வேலும் மயிலும்…
உனது தந்தை இறைவனுக்கும்…
வேலும் மயிலும் புதியது…

பெண் : முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…

BGM

பெண் : திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது…
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது…
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது…
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது…

பெண் : அறிவில் அரியது அருளில் பெரியது…
அறிவில் அரியது அருளில் பெரியது…

பெண் : அள்ளி அள்ளி உண்ண உண்ண…
உனது தமிழ் இனியது…
அள்ளி அள்ளி உண்ண உண்ண…
உனது தமிழ் இனியது…

பெண் : முதலில் முடிவது முடிவில் முதலது…
முதலில் முடிவது முடிவில் முதலது…
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது…

BGM


Notes : Ariyathu Ketkin Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Kannadasan. அரியது கேட்கின் பாடல் வரிகள்.


ஆறு முகமான பொருள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்ராஜலட்சுமி & எஸ். ஜானகிகே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Aarumugamana Porul Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்…
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்…
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்…
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்…

BGM

பெண் : கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க…
கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க…

பெண் : கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க…
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க…

பெண் : ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்…
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்…

BGM

பெண் : தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று…
தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று…

பெண் : பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று…
பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று…

பெண் : பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று…
பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று…

பெண் : பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று…
பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று…

பெண் : வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று…
வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று…

பெண் : வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று…
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று…

பெண் : ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்…
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்…
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்…
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்…


Notes : Aarumugamana Porul Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Kannadasan. ஆறு முகமான பொருள் பாடல் வரிகள்.


அறுபடை வீடு கொண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்கே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Arupadai Veedu Konda Song Lyrics in Tamil


ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
திரு முருகாற்றுப்படைதனிலே வரும் முருகா முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
திரு முருகாற்றுப்படைதனிலே வரும் முருகா முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

ஆண் : பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்…
பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்…
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன்…
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு…
அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு…
வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு…
அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு…

ஆண் : ஆண்டியின் கோலமுற்று மலை மீது…
ஆண்டியின் கோலமுற்று மலை மீது…
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு…
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து…
நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து…
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து…
நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து…

ஆண் : தந்தைக்கு உபதேசம் செய்த மலை…
தந்தைக்கு உபதேசம் செய்த மலை…
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை…
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து…
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து…
தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து…
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து…

ஆண் : கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு…
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு…
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு…
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : குறு நகை தெய்வானை மலரோடு…
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு…
குறு நகை தெய்வானை மலரோடு…
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு…

ஆண் : திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு…
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு…
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு…
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து…
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து…
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து…
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து…

ஆண் : காவல் புரியவென்று அமர்ந்த மலை…
காவல் புரியவென்று அமர்ந்த மலை…
எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை…
தணிகை மலை திருத் தணிகை மலை…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு அடியவர்க்கு…
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு…
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து…
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு…
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து…

ஆண் : வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை…
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை…
தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை…
மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
திரு முருகாற்றுப்படைதனிலே வரும் முருகா முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
முருகா… முருகா…


Notes : Arupadai Veedu Konda Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Kannadasan. அறுபடை வீடு கொண்ட பாடல் வரிகள்.


சொல்லச் சொல்ல இனிக்குதடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Solla Solla Inikkuthada Song Lyrics in Tamil


பெண் : தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து…
தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா…
மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த…
என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா…

பெண் : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…

பெண் : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா…

பெண் : பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே…
பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…

BGM

பெண் : முருகன் என்றால் அழகன் என்று…
தமிழ் மொழி கூறும்…
அழகன் எந்தன் குமரனென்று…
மன மொழி கூறும்…

பெண் : முருகன் என்றால் அழகன் என்று…
தமிழ் மொழி கூறும்…
அழகன் எந்தன் குமரனென்று…
மன மொழி கூறும்…

பெண் : உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது…
உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது…
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ…
கந்தா உன் அருளன்றோ முருகா…

பெண் : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…

BGM

பெண் : உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்…
உன் பெயர் பாடும்…
உண்மை பேசும் மொழிகள் எல்லாம்…
உன் புகழ் பேசும்…

பெண் : உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்…
உன் பெயர் பாடும்…
உண்மை பேசும் மொழிகள் எல்லாம்…
உன் புகழ் பேசும்…

பெண் : யுகங்கள் எல்லாம் மாறி மாறி…
சந்திக்கும் போது…
யுகங்கள் எல்லாம் மாறி மாறி…
சந்திக்கும் போது…
உன் முகமலரின் அழகு மட்டும்…
முதுமை வராது கந்தா…
முதுமை வராது குமரா…

பெண் : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…


Notes : Solla Solla Inikkuthada Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Kannadasan. சொல்லச் சொல்ல இனிக்குதடா பாடல் வரிகள்.