அறுபடை வீடு கொண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்கே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Arupadai Veedu Konda Song Lyrics in Tamil


ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
திரு முருகாற்றுப்படைதனிலே வரும் முருகா முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
திரு முருகாற்றுப்படைதனிலே வரும் முருகா முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

ஆண் : பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்…
பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்…
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன்…
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு…
அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு…
வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு…
அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு…

ஆண் : ஆண்டியின் கோலமுற்று மலை மீது…
ஆண்டியின் கோலமுற்று மலை மீது…
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு…
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து…
நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து…
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து…
நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து…

ஆண் : தந்தைக்கு உபதேசம் செய்த மலை…
தந்தைக்கு உபதேசம் செய்த மலை…
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை…
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து…
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து…
தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து…
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து…

ஆண் : கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு…
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு…
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு…
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குறு நகை தெய்வானை மலரோடு…
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு…
குறு நகை தெய்வானை மலரோடு…
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு…

ஆண் : திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு…
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு…
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு…
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து…
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து…
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து…
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து…

ஆண் : காவல் புரியவென்று அமர்ந்த மலை…
காவல் புரியவென்று அமர்ந்த மலை…
எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை…
தணிகை மலை திருத் தணிகை மலை…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…

BGM

ஆண் : கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு அடியவர்க்கு…
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு…
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து…
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு…
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து…

ஆண் : வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை…
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை…
தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை…
மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
திரு முருகாற்றுப்படைதனிலே வரும் முருகா முருகா…

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
முருகா… முருகா…


Notes : Arupadai Veedu Konda Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Kannadasan. அறுபடை வீடு கொண்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading