அரியது கேட்கின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி. சுந்தரம்பாள்கே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Ariyathu Ketkin Song Lyrics in Tamil


ஆண் : ஔவையே உலகில் அரியது என்ன…

பெண் : அரியது கேட்கின் வரிவடிவேலோய்…
அரிது அரிது மானிடராதல் அரிது…
மானிடராயினும் கூன் குருடு…
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…

பெண் : கூன் குருடு செவிடு பேடு…
நீங்கிப் பிறந்த காலையும்…
ஞானமும் கல்வியும் நயத்தலரிது…

பெண் : ஞானமும் கல்வியும் நயந்த காலையும்…
தானமும் தவமும்தான் செய்தல் அரிது…
தானமும் தவமும்தான் செய்வராயின்…
வானவர் நாடு வழி பிறந்திடுமே…

ஆண் : அரியது கேட்டமைக்கு அழகான தமிழில்…
விளக்கம் தந்த மூதாட்டியே கொடியது என்ன…

பெண் : கொடியது கேட்கின் வரிவடிவேலோய்…
கொடிது கொடிது வறுமை கொடிது…
அதனினும் கொடிது இளமையில் வறுமை…

பெண் : அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடு நோய்…
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்…
அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பதுதானே…

ஆண் : மிக்க மகிழ்ச்சி…
சொல்லால் தமிழால் வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்…
திறமை படைத்த ஔவையே பெரியது என்ன…

பெண் : பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்…
பெரிது பெரிது புவனம் பெரிது…
புவனமும் நான் முகன் படைப்பு…
நான்முகன் கரியமால் முந்தியில் வந்தோன்…

பெண் : கரியமாலோ அலைகடல் துயின்றோன்…
அலைகடலோ குருமுனி யங்கையில் அடக்கம்…
குருமுனியோ கலசத்துப் பிறந்தோன்…
கலசமோ புவியிற் சிறுமண்…
புவியோ அரவினிக் ஒரு தலைப் பாரம்…
அரமோ உமையவள் சிறு விரல் மோதிரம்…

பெண் : உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்…
இறைவனோ தொண்டர் உள்ளத்தொடுக்கம்…
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே…

ஆண் : ஔவையே… வானவரும் உனது வாக்கிற்கு…
அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை…
இனியது என்ன…

பெண் : இனியது கேட்கின் தனி நெடுவேலோய்…
இனிது இனிது ஏகாந்த்தம் இனிது…
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்…

பெண் : அதனினும் இனிது அறிவினர் சேர்தல்…
அதனினும் இனிது அறிவுள்ளோரை…
கனவிலும் நனவிலும் காண்பதுதானே…

ஆண் : அரியது கொடியது பெரியது இனியது…
அனைத்திற்கும் முறையோடு விடை பகன்ற ஔவையே…
புதியது என்ன…

பெண் : என்றும் புதியது…
பாடல் என்றும் புதியது…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…

பெண் : முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…
முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…

பெண் : அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்…
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…

பெண் : அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்…
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த…
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது…

பெண் : முருகன் என்ற பெயரில் வந்த…
அழகே என்றும் புதியது…
முருகன் என்ற பெயரில் வந்த…
அழகே என்றும் புதியது…

பெண் : முறுவல் காட்டும் குமரன் கொண்ட…
இளமை என்றும் புதியது…
முறுவல் காட்டும் குமரன் கொண்ட…
இளமை என்றும் புதியது…

பெண் : உன்னைப் பெற்ற அன்னையர்க்கு…
உனது லீலை புதியது…
உன்னைப் பெற்ற அன்னையர்க்கு…
உனது லீலை புதியது…

பெண் : உனது தந்தை இறைவனுக்கும்…
வேலும் மயிலும்…
உனது தந்தை இறைவனுக்கும்…
வேலும் மயிலும் புதியது…

பெண் : முருகா உன்னைப் பாடும் பொருள் நிறைந்த…
பாடல் என்றும் புதியது…

BGM

பெண் : திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது…
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது…
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது…
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது…

பெண் : அறிவில் அரியது அருளில் பெரியது…
அறிவில் அரியது அருளில் பெரியது…

பெண் : அள்ளி அள்ளி உண்ண உண்ண…
உனது தமிழ் இனியது…
அள்ளி அள்ளி உண்ண உண்ண…
உனது தமிழ் இனியது…

பெண் : முதலில் முடிவது முடிவில் முதலது…
முதலில் முடிவது முடிவில் முதலது…
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது…

BGM


Notes : Ariyathu Ketkin Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Kannadasan. அரியது கேட்கின் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top