azhagae-song-lyrics

அழகே பொழிகிறாய் அருகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அருண் காமத் & ஜொனிடா காந்தியுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Azhagae Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே பொழிகிறாய் அருகே…
விரல்களில் சிறகே…
இணைத்துப் போனாய்…
உன் காற்றில் ஆடினேன்…

ஆண் : அழகே ஒளிவிழும் மெழுகே…
இமையில் உன் இறகே…
வருடிப் போனாய்…
கண்மூடிக் காதல் நான் ஆனேன்…

ஆண் : நீ வீசிடும் சிறு மூச்சை…
உள்வாங்கினேன்…
மலர் ஆனேன்…
உன் மடி வீழ்ந்தேன்…
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்…

பெண் : அழகே பொழிகிறாய் அருகே…
விரல்களில் சிறகே…
இணைத்துப் போனாய்…
உன் காற்றில் ஆடினேன்…

BGM

ஆண் : ஓஹோ…
சிப்பிக்குள் ஒட்டிக் கொள்ளும்…
முத்துப் போல…
திட்டிக்குள் ஒட்டிக் கொள்ளும்…
அன்புப் பார்த்தேன்…
வெயிலில் வீழ்ந்து விட்ட…
துளிப் போல…
உன் கடை விழி கனலில் காய்கிறேன்…

பெண் : திண்டத் திண்டாடி…
வீனாவேன்…
உன்னைக் கொண்டாடித்…
தேனாவேன்…
கண்ணாக் கண்ணாடி…
நான் ஆவேன்…
நில் என் முன்னாடி…
நீ யாவேன்…

பெண் : அழகே பொழிகிறாய் அருகே…
விரல்களில் சிறகே…
இணைத்துப் போனாய்…
உன் காற்றில் ஆடினேன்…

பெண் : அழகே ஒளிவிழும் மெழுகே…
இமையில் உன் இறகே…
வருடிப் போனாய்…
கண்மூடிக் காதல் நான் ஆனேன்…

ஆண் : நீ வீசிடும் சிறு மூச்சை…
உள்வாங்கினேன்…
மலர் ஆனேன்…
உன் மடி வீழ்ந்தேன்…
நீ ஏந்தும்…
அன்பில் வாழ்கிறேன்…

பெண் : அழகே பொழிகிறாய் அருகே…
விரல்களில் சிறகே…
இணைத்துப் போனாய்…
உன் காற்றில் ஆடினேன்…

BGM


Notes : Azhagae Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Vivek. அழகே பொழிகிறாய் அருகே பாடல் வரிகள்.