தங்கத் தாமரை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ. ஆர். ரகுமான்மின்சார கனவு

Thanga Thamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தங்கத் தாமரை மகளே…
வா அருகே…
தத்தித் தாவுது மனமே…
வா அழகே…

ஆண் : வெள்ளம் மன்மத வெள்ளம்…
சிறு விாிசல் கண்டது உள்ளம்…
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே…

ஆண் : தங்கத் தாமரை மகளே…
வா அருகே…
தத்தித் தாவுது மனமே…
வா அழகே…

ஆண் : வெள்ளம் மன்மத வெள்ளம்…
சிறு விாிசல் கண்டது உள்ளம்…
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே…

ஆண் : தங்கத் தாமரை மகளே…
வா அருகே…
தங்கத் தாமரை மகளே…
இளம் மகளே…
வா அருகே…

BGM

ஆண் : செழித்த அழகில்…
சிவந்து நிற்கும் செந்தேனே…
என் கழுத்து வரையில்…
ஆசை வந்து நின்றேனே…

ஆண் : வெறித்த கண்ணால்…
கண்கள் விழுங்கும் பெண்மானே…
உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே…
காணாமல் நான் போனேனே…

ஆண் : இருதயத்தின் உள்ளே…
உலை ஒன்று கொதிக்க…
எந்த மூடி போட்டு…
நான் என்னை மறைக்க…
தொடட்டுமா தொல்லை நீக்க…

ஆண் : தங்கத் தாமரை மகளே…
வா அருகே…
தத்தித் தாவுது மனமே…
வா அழகே…

BGM

ஆண் : பறக்கும் வண்டுகள்…
பூவில் கூடும் காா்காலம்…
கனைக்கும் தவளை…
துணையைச் சேரும் காா்காலம்…

ஆண் : பிாிந்த குயிலும்…
பேடை தேடும் காா்காலம்…
பிாிந்திருக்கும் உயிரை எல்லாம்…
பிணைத்து வைக்கும் காா்காலம்…

ஆண் : நகம் கடிக்கும் பெண்ணே…
அடக்காதே ஆசை…
நாகரீகம் பாா்த்தால்…
நடக்காது பூஜை…
நெருக்கமே காதல் பாஷை…

ஆண் : தங்கத் தாமரை மகளே…
வா அருகே…
தத்தித் தாவுது மனமே…
வா அழகே…

ஆண் : வெள்ளம் மன்மத வெள்ளம்…
சிறு விாிசல் கண்டது உள்ளம்…
இவை எல்லாம் பெண்ணே…

ஆண் : தங்கத் தாமரை மகளே…
தத்தித் தாவுது மனமே…
தங்கத் தாமரை மகளே…
தத்தித் தாவுது மனமே வா…

BGM


Notes : Thanga Thamarai Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. தங்கத் தாமரை பாடல் வரிகள்.


Scroll to Top