அன்பென்ற மழையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம்ஏ. ஆர். ரகுமான்மின்சார கனவு

Anbendra Mazhayile Song Lyrics in Tamil


பெண் : அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…

பெண் : விண்மீன்கள் கண்பாா்க்க சூாியன் தோன்றுமோ…
புகழ்மைந்தன் தோன்றினானே…
கண்ணீாின் காயத்தை செந்நீாில் ஆற்றவே…
சிசுபாலன் தோன்றினானே…

பெண் : அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
குழு : அதிரூபன் தோன்றினானே…

பெண் : போா்கொண்ட பூமியில் பூக்காடு காணவே…
புகழ்மைந்தன் தோன்றினானே…
குழு : புகழ்மைந்தன் தோன்றினானே…

BGM

பெண் : கல்வாாி மலையிலே கல்லொன்று பூக்கவும்…
கருணைமகன் தோன்றினானே…
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்…
ஒளியாகத் தோன்றினானே…

பெண் : இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே…
இறைபாலன் தோன்றினானே…
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே…
புவிராஜன் தோன்றினானே…

BGM

பெண் : அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
குழு : அதிரூபன் தோன்றினானே…

பெண் : வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…
குழு : வந்தவன் மின்னினானே…

பெண் : அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
குழு : அதிரூபன் தோன்றினானே…

பெண் : வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…
குழு : வந்தவன் மின்னினானே…


Notes : Anbendra Mazhayile Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. அன்பென்ற மழையிலே பாடல் வரிகள்.


Scroll to Top