அவளுக்கென்ன அழகிய முகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிL.R. ஈஸ்வரி & டி.எம். சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திசர்வர் சுந்தரம்

Avalukkenna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்…
அவளுக்கென்ன அழகிய முகம்…
அவனுக்கென்ன இளகிய மனம்…
நிலவுக்கென்ன…
இரவினில் வரும் இரவுக்கென்ன…
உறவுகள் தரும் உறவுக்கென்ன…
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்…

—BGM—

ஆண் : ஹோ… அழகு ஒரு மேஜிக் டச்…
ஹோ… ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்…
ஒ…ஓஒ… ஹோ… அழகு ஒரு மேஜிக் டச்…
ஹோ… ஓஒ… ஹோ… ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்…

—BGM—

ஆண் : ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு…
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை…
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு…
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை…
வா வா என்பதை விழியில் சொன்னாள்…
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்…

ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்…
அவனுக்கென்ன இளகிய மனம்…
நிலவுக்கென்ன…
இரவினில் வரும் இரவுக்கென்ன…
உறவுகள் தரும் உறவுக்கென்ன…
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்…

—BGM—

பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு…
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு…

பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு…
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு…
அவன் அள்ளி எடுத்தான் கையோடு…
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு… கனிவோடு…

பெண் : அவனுக்கென்ன இளகிய மனம்…
அவளுக்கென்ன அழகிய முகம்…
நிலவுக்கென்ன…
இரவினில் வரும் இரவுக்கென்ன…
உறவுகள் தரும் உறவுக்கென்ன…
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்…

—BGM—

ஆண் : சிற்றிடை என்பது…
பெண் : முன்னழகு…
ஆண் : சிறு நடை என்பது…
பெண் : பின்னழகு…

ஆண் : சிற்றிடை என்பது…
பெண் : முன்னழகு…
ஆண் : சிறு நடை என்பது…
பெண் : பின்னழகு…

ஆண் : பூவில் பிறந்தது…
பெண் : கண்ணழகு…
ஆண் : பொன்னில் விளைந்தது…
பெண் : பெண்ணழகு…

ஆண் : பூவில் பிறந்தது…
பெண் : கண்ணழகு…
ஆண் : பொன்னில் விளைந்தது…
பெண் : பெண்ணழகு…

ஆண் & பெண் : ல ல ல… லலலல லல்ல லா… லல்லலலலல்லா…
லலலல லல்ல லா… லல்லலலலல்லா…
லலலல லல்ல லா… லல்லலலலல்லா…
லலலல லல்ல லா… லல்லலலலல்லா…

—BGM—


Notes : Avalukkenna Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (1964). Song Lyrics penned by Vaali. அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading