போகப் போக தெரியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்பி.பி.ஸ்ரீனிவாஸ் & பி.சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திசர்வர் சுந்தரம்

Poga Poga Theriyum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : போகப் போக தெரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…

—BGM—

பெண் : போகப் போக தெரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…

பெண் : போகப் போக தெரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…

—BGM—

ஆண் : கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன…
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன…
கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன…
கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன…

ஆண் : பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு…
ஆட வாராமல் இருப்பதென்ன…
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு…
ஆட வாராமல் இருப்பதென்ன…

பெண் : போக போக தெரியும்…
இந்த பூவின் வாசம் புரியும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…

பெண் : போகப் போக தெரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…

—BGM—

பெண் : பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்…
கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன்…
பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்…
கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன்…

பெண் : என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்…
பயணம் வாராமல் இருப்பதென்ன…
என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும்…
பயணம் வாராமல் இருப்பதென்ன…

ஆண் : காலம் நேரம் பிறக்கும்…
நம் காதல் கதவுகள் திறக்கும்…
நம் கண்கள் அப்போது துடிக்கும்…
உன் கன்னம் எப்போது சிவக்கும்…

பெண் : போகப் போக தெரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…

—BGM—


Notes : Poga Poga Theriyum Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (1964). Song Lyrics penned by Kannadasan. போகப் போக தெரியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading