aval-kuzhal-song-lyrics

அவள் குழல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார் & பிரியா ஹிமேஷ்சந்தோஷ் நாராயணன்மனிதன்

Aval Kuzhal Song Lyrics in Tamil


ஆண் : அவள் குழல் உதிர்த்திடும்…
இலை எனை துளைத்திடும்…
இடைவெளி முளைத்திடும்…
நேரம் உயிர் நனைத்திடும்…

ஆண் : அவள் இதழ் திரட்டிடும்…
மழை என்னில் தெரித்திடும்…
சுழல் என சுழற்றிடும்…
நெஞ்சைச் சுருட்டிடும்…

BGM

ஆண் : அழகழகா அவ தெரிவா உயிர் உரிவா…
மெது மெதுவா விரி விரிவா விழி எறிவா…

ஆண் : எனக்கானவளே நீதான் கிட்ட வறியா…
தெரிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா…
உடனே என்ன உதறிப்போனா சரியா…
இனிமே நானும் உயிரும் அட தனியா…

ஆண் : என் சொகமே… என் மொகமே…
எங்கேயோ தொலைஞ்சவளே…
என் வரமே… என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே…

BGM

பெண் : காலம் போகுதே கடிகாரம் ஓடுதே…
உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ…
வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற…
திருந்தாத நான்தான் தப்போ…

ஆண் : படபடக்கும் கண்ணால…
என மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட…
மனசுடைஞ்சு போகாத…
உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்…

ஆண் : என் சொகமே என் மொகமே…
எங்கேயோ தொலைஞ்சவளே…
என் வரமே என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே…

ஆண் : அழகழகா அவ தெரிவா உயிர் உரிவா…
மெது மெதுவா விரி விரிவா விழி அறிவா…

ஆண் : உடனே என்ன உதறிப்போனா சரியா…
இனிமே நானும் உயிரும் அட தனியா…

ஆண் : என் சொகமே… என் மொகமே…
எங்கேயோ தொலைஞ்சவளே…
என் வரமே… என் நிறமே…
ஏழாக வளைஞ்சவளே…

BGM


Notes :  Aval Kuzhal Song Lyrics in Tamil. This Song from Manithan (2016). Song Lyrics penned by Vivek. அவள் குழல் பாடல் வரிகள்.