தாமரை கன்னங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாவி. குமார்எதிர்நீச்சல் (1968)

Thamarai Kannangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…
தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…

ஆண் : எத்தனை வண்ணங்கள்…
முத்தமாய் சிந்தும்போது…
பொங்கிடும் எண்ணங்கள்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…

பெண் : மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது…
கைகளை மன்னித்தேன்…
கைகளை மன்னித்தேன்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…

BGM

ஆண் : கொத்து மலர் குழல்…
பாதம் அளந்திடும் சித்திரமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : முத்து நகை தரும்…
மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : கொத்து மலர் குழல்…
பாதம் அளந்திடும் சித்திரமோ…
பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : முத்து நகை தரும்…
மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ…

பெண் : துயில் கொண்ட வேளையிலே…
குளிர் கண்ட மேனியிலே…
துணை வந்து சேரும்போது…
சொல்லவோ இன்பங்கள்…

பெண் : மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்…

—BGM—

பெண் : ஆலிலை மேலொரு கண்ணனைப்போல்…
இவன் வந்தவனோ…
நூலிடை மேலொரு…
நாடகம் ஆடிட நின்றவனோ…

பெண் : ஆலிலை மேலொரு கண்ணனைப்போல்…
இவன் வந்தவனோ…
நூலிடை மேலொரு…
நாடகம் ஆடிட நின்றவனோ…

ஆண் : சுமை கொண்ட பூங்கொடியின்…
சுவை கொண்ட தேன் கனியை…
உடை கொண்டு மூடும்போது…
உறங்குமோ உன்னழகு…

ஆண் : தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…

ஆண் : எத்தனை வண்ணங்கள்…
முத்தமாய் சிந்தும்போது…
பொங்கிடும் எண்ணங்கள்…

பெண் : ஆஆ… மாலையில் சந்தித்தேன்…
மையலில் சிந்தித்தேன்…
மங்கை நான் கன்னித்தேன்…
காதலன் தீண்டும்போது…
கைகளை மன்னித்தேன்…


Notes : Thamarai Kannangal Song Lyrics in Tamil. This Song from Edhir Neechal (1968). Song Lyrics penned by Vaali. தாமரை கன்னங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top