அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாவி. குமார்எதிர்நீச்சல் (1968)

Aduthathu Ambujatha Song Lyrics in Tamil


பெண் : ஏன்னா நீங்க சமத்தா இல்ல அசடா…
சமத்தா இருந்தா கொடுப்பேலாம்…
அசடா இருந்தா மறுப்பேலாம்… ஆண் : ஏன்டி புதுசா கேக்குற…
என்ன பார்த்து…

பெண் : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா… ஏன்னா…
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா…

பெண் : அடிச்சாலும் புடிச்சாலும்…
அவா ஒன்னா சேர்ந்துக்கறா…
அடிச்சாலும் புடிச்சாலும்…
அவா ஒன்னா சேர்ந்துக்கறா…

பெண் : அடிச்சதுக்கொன்னு… புடிச்சதுக்கொன்னு…
பொடவய வாங்கிக்கிறா…
பட்டு பொடவய வாங்கிக்கிறா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா…

BGM

ஆண் : அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி…
அவன் சம்பளம் பாதி…
கிம்பளம் பாதி வாங்கறான்டி… பட்டூ…

ஆண் : அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி…
அவன் சம்பளம் பாதி…
கிம்பளம் பாதி வாங்கறான்டி…

ஆண் : மூன்றெழுத மூணு ஷோவும்…
பாத்தது நீதான்டி…
மூன்றெழுத மூணு ஷோவும்…
பாத்தது நீதான்டி…

ஆண் : சினிமாவுக்கே சம்பளம் போனா…
புடவைக்கேதடி…
பட்டூ புடவைக்கேதடி…
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி…

BGM

பெண் : உங்களுக்கு தான் வாக்கப்பட்டு…
என்னத்த கண்டா பட்டு…
உங்களுக்கு தான் வாக்கப்பட்டு…
என்னத்த கண்டா பட்டு…

ஆண் : பட்டு கிட்டு பேரைச்சொல்ல…
பொறந்திருக்கே ஒரு லட்டு…
பட்டு கிட்டு பேரைச்சொல்ல…
பொறந்திருக்கே ஒரு லட்டு…

பெண் : நாளும் கிழமையும் போட்டுக்க…
ஒரு நகைநட்டுண்டா நேக்கு…
நாளும் கிழமையும் போட்டுக்க…
ஒரு நகைநட்டுண்டா நேக்கு…

பெண் : எட்டுக்கல்லு பேசாரி…
போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு…
எட்டுக்கல்லு பேசாரி போட்டா…
எடுப்பா இருக்கும் மூக்கு…

ஆண் : சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்…
தெரியாதோடி நோக்கு…
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும்…
தெரியாதோடி நோக்கு…

பெண் : எப்போ இருந்தது இப்போ வர்றதுக்கு…
எதுக்கெடுத்தாலும் சாக்கு… ம்கும்…

பெண் : அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா…

BGM

ஆண் : ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ…

BGM

பெண் : பேசினா என்ன வைப்பேளா…
ஒரு குட்டு…

BGM

ஆண் : ஆத்திரம் வந்தா பொல்லாதவன்டி கிட்டு…

BGM

பெண் : என்னத்த செய்வேள்…
ஆண் : சொன்னத செய்வேன்…

பெண் : வேரென்ன செய்வேள்…
ஆண் : அடக்கி வைப்பேன்…

பெண் : அதுக்கும் மேலே…
ஆண் : ம்ம்… பல்ல உடைப்பேன்…

பெண் : ஆஆஆஆ…
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா…
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா…

ஆண் : பட்டூ அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டி…
பட்டூ நமக்கேன்டி… பட்டூ நமக்கேன்டி…


Notes : Aduthathu Ambujatha Song Lyrics in Tamil. This Song from Edhir Neechal (1968). Song Lyrics penned by Vaali. அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading