முகுந்தா முகுந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசாதனா சர்கம் & கமல்ஹாசன்ஹிமேஷ் ரேஷ்மியாதசாவதாரம்

Mukundha Mukundha Song Lyrics in Tamil


BGM

பெண் : முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தா வனம் தா வனம் தா…

பெண் : முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தா வனம் தா வனம் தா…

பெண் : வெண்ணை உண்ட வாயால்…
மண்ணை உண்டவா…
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு…
மருந்தாக வா…

பெண் : முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தா வனம் தா வனம் தா…

பெண் : என்ன செய்ய நானும்…
தோல் பாவைதான்…
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும்…
நூல் பாவைதான்…

பெண் : முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தா வனம் தா வனம் தா…

BGM

குழு : ஜெய் ஜெய் ராம்…
ஜெய் ஜெய் ராம்…
ஜெய் ஜெய் ராம்…
ஜெய் ஜெய் ராம்…

குழு : சீதா ராம் ஜெய் ஜெய் ராம்…
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்…

BGM

பெண் : மச்சமாக நீரில் தோன்றி…
மறைகள் தன்னை காத்தாய்…
கூர்மமாக மண்ணில் தோன்றி…
பூமி தன்னை மீட்டாய்…

BGM

பெண் : வாமணன் போல் தோற்றம் கொண்டு…
வானளந்து நின்றாய்…
நரன் கலந்த சிம்மமாகி…
இரணியனை கொன்றாய்…

பெண் : ராவணன் தன் தலையை கொய்ய…
ராமனாக வந்தாய்…
கண்ணனாக நீயே வந்து…
காதலும் தந்தாய்…

பெண் : இங்கு உன் அவதாரம்…
ஒவ்வொன்றிலும்தான் உன் தாரம் நானே…
உன் திருவடி பட்டால் திருமணமாகும்…
என்றிலே ஏங்குகிறேனே…

பெண் : மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே…
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே…

பெண் : முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தா வனம் தா வனம் தா…

பெண் : உசுரோடு இருக்கான் நான் பெத்த பிள்ள…
ஏனோ இன்னும் தகவல் வரல…
வானத்தில் இருந்து வந்து குதிப்பான்…
சொன்னா கேளுங்கோ அசடுகளே…

பெண் : ஆராவமுதா அழகா வாடா…
உடனே வாடா வாடா…
கோவிந்தா கோபாலா… ஹே…

பெண் : முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தா வனம் தா வனம் தா…

பெண் : முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தா வனம் தா வனம் தா…


Notes : Mukundha Mukundha Song Lyrics in Tamil. This Song from Dhasaavathaaram (2008). Song Lyrics penned by Vaali. முகுந்தா முகுந்தா கண்டால் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top