கல்லை மட்டும் கண்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன்ஹிமேஷ் ரேஷ்மியாதசாவதாரம்

Kallaimattum Kandal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓம் நமோ நாராயணாய…

—BGM—

ஆண் : கல்லை மட்டும் கண்டால்…
கடவுள் தெரியாது…
கடவுள் மட்டும் கண்டால்…
கல்லடி தெரியாது…

ஆண் : கல்லை மட்டும் கண்டால்…
கடவுள் தெரியாது…
கடவுள் மட்டும் கண்டால்…
கல்லடி தெரியாது…

ஆண் : எட்டில் ஐந்து எண் கழியும்…
என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாது…
அஷ்ட அக்சரம் ஏற்கும் நெஞ்சு…
பஞ்ச அக்சரம் பார்க்காது…

ஆண் : ஊனக் கண்ணில் பார்த்தால்…
யாவும் குற்றம்தான்…
ஞானக் கண்ணில் பார்த்தால்…
யாரும் சுற்றம்தான்…

—BGM—

ஆண் : இல்லை என்று சொன்ன பின்பும்…
இன்றியமையாது…
தொல்லை தந்த போதும் எங்கள்…
தில்லை மாறாது…

குழு : இல்லை என்று சொன்ன பின்பும்…
இன்றியமையாது…
தொல்லை தந்த போதும் எங்கள்…
தில்லை மாறாது…

ஆண் : வீர சைவர்கள் முன்னால் எங்கள்…
வீர வைணவம் தோற்காது…
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்…
மேற்கில் சூரியன் உதிக்காது…

ஆண் : ராஜலெட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்…
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்…
நான் நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜதா்தான்…
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்…

—BGM—

ஆண் : நீருக்குள்ளே மூழ்கினாலும்…
நீதி சாகாது…
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்…
ஜோதி சாகாது…

குழு : நீருக்குள்ளே மூழ்கினாலும்…
நீதி சாகாது…
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள்…
ஜோதி சாகாது…

ஆண் : வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்…
வெண்ணிலாவை அது அணைத்திடுமா…
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்…
அந்த வானம்தன்னை அது நனைத்திடுமா…

ஆண் : சைவம் என்று பார்த்தால்…
தெய்வம் தெரியாது…
தெய்வம் என்று பார்த்தால்…
சமயம் கிடையாது…

ஆண் : கல்லை மட்டும் கண்டால்…
கடவுள் தெரியாது…
கடவுள் மட்டும் கண்டால்…
கல்லடி தெரியாது…

—BGM—


Notes : Kallaimattum Kandal Song Lyrics in Tamil. This Song from Dhasaavathaaram (2008). Song Lyrics penned by Vaali. கல்லை மட்டும் கண்டால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading