நான் ஓடும் நதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & திப்புயுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Naan Odum Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

ஆண் : எந்த வேலையும் செய்வேன்…
அதில் ஏற்றத்தாழ்வு ஏது…
அட உன்னை நம்பியே நின்றால்…
உனை ஊரும் பேசாதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நெற்றி வேர்வையை சிந்த…
ஒரு நேரம் காலம் என்ன…
அட வெற்றி என்று தென்றல்…
நம் வாசல் வந்து வீசாதோ…

ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

BGM

ஆண் : போகவில்லை நேரம்…
என பேசாதீர்கள் யாரும்…
அது போதவில்லை என்றே சொல்லி…
வேலை செய்யுங்கள்…

ஆண் : அட இமயம் என்ன இமயம்…
நீ இதயம் வைத்தால் அதையும்…
அள்ளி ஏந்தக்கூடும் உள்ளங்கையில்…
இன்று நீங்கள்…

ஆண் : மனிதன் என்னும் சொல் பெரியதடா…
கொடுத்திடு அதற்க்கொரு பெருமையடா…

குழு : பிறர் கண்ணிலே வரும் நீர்த்துளி…
இந்த கைகள் துடைக்கும்…
அந்த கைகள்தான் அன்பு காவியம்…
இந்த மண்ணில் படைக்கும்…

ஆண் : ஹோய்… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

BGM

ஆண் : என்ன நேரும் நாளை…
என எடுத்துக்கூறும் மூளை…
அந்த தெய்வம் இங்கே…
யாருக்குமே தந்ததில்லையே…

ஆண் : அட இன்றே இப்போ இங்கு…
என எதையும் செய்தால் நன்று…
நான் சொல்லும் வார்த்தை நண்பா…
கொஞ்சம் சிந்திப்பாயே…

ஆண் : இருக்கின்ற பொழுதை பயன்படுத்து…
தடைகளை உடைத்து தலை நிமிர்த்து…

குழு : இந்த வேள்விதான்…
இந்த வேளைதான்…
இனி போனால் வருமா…

குழு : இது ஒன்று தான்…
நிஜம் என்றுதான்…
நாம் வாழ்வோம் நலமா…

ஆண் : ஹோய்… ஹோய்… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

ஆண் : எந்த வேலையும் செய்வேன்…
அதில் ஏற்றத்தாழ்வு ஏது…
அட உன்னை நம்பியே நின்றால்…
உனை ஊரும் பேசாதோ…

ஆண் : நெற்றி வேர்வையை சிந்த…
ஒரு நேரம் காலம் என்ன…
அட வெற்றி என்று தென்றல்…
நம் வாசல் வந்து வீசாதோ…

ஆண் : ஹோயா… நான் ஓடும் நதி போல்…
என்றும் ஓடும் இளைஞன்…
அந்த கீதை சொன்ன பாதை போவேன்…

ஆண் : ஹோய்… நான் ஓய்வதில்லையே…
கண் சாய்வதில்லையே…
அந்த வானம் வாழும் காலம் வாழ்வேன்…

BGM


Notes : Naan Odum Nadhi Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Vaali. நான் ஓடும் நதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading