மனசே இள மனசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்போனி சக்ரவர்த்தி, திப்பு & சுவர்ணலதாயுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Manase Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனசே இள மனசே…
மலரும் பூ மனசே…
மனதில் நினைப்பதெல்லாம்…
நடக்கும் நாள் இதுவே…

ஆண் : மனசே இள மனசே…
மலரும் பூ மனசே…
மனதில் நினைப்பதெல்லாம்…
நடக்கும் நாள் இதுவே…

ஆண் : ஒரு சொர்க்கத்திலே இது…
உருவான உறவா…
இல்லை சொர்க்கத்தையே இங்கு…
உருவாக்கும் உறவா…

ஆண் : ஆனந்தம் அலை மோதும்…
கண்ணில் எந்நாளும்…
கொண்டாட்டம் கும்மாளம்…
மண்ணில் எப்போதும்… ஹே…
கொண்டாட்டம் கும்மாளம்…
மண்ணில் எப்போதும்…

ஆண் : என்றும் சந்தோஷம்…
எங்கும் சந்தோஷம்…
வானம் வரைக்கும்…
அடடா எங்கள் சந்தோஷம்…

ஆண் : ஒரு வயசு ஆனது போல்…
இன்பம் இருக்கு…
ஒரு கோடி காலம் வாழ…
ஆசை எனக்கு… ஹே…
ஒரு கோடி காலம் வாழ…
ஆசை எனக்கு…

—BGM—

ஆண் : ஒரு நாள் பூக்களும்தான்…
தலுக்கென புன்னகைக்கும்…
சிரிக்கும் மனிதனுக்கே…
சிகரம் காத்திருக்கும்…

ஆண் : பூ முதல் புல் வரைக்கும்…
ஒவ்வொன்றும் ரசித்திடலாம்…
குயிலின் கூட்டுக்குள்ளே…
கொஞ்ச நாள் வசித்திடலாம்…

ஆண் : வானவில்லை கண்டால்…
நீ விழி இமைக்காதே…
அது மூணு நிமிஷம்தான்…
அதை இழந்துவிடாதே…

ஆண் : வானம் வரை எட்டும்…
எங்கள் வாழ்த்து சத்தம்தான்…
காலம் கை தட்டும்…
இனி காதல் நித்தம்தான்… ஹே…

ஆண் : வானம் வரை எட்டும்…
எங்கள் வாழ்த்து சத்தம்தான்…

பெண் : ஆசை வந்தாச்சே…
ஆசை வந்தாச்சே…
நெஞ்சுக்குள்ளேதான்…
புது புது ஆசை வந்தாச்சே…

பெண் : ஏதேதோ கனவுகள்தான்…
கண்ணில் வந்தாச்சே…
இது போல வாழ்ந்திடதான்…
ஆசை வந்தாச்சே…

—BGM—

ஆண் : வாழ்வில் ஒரு முறைதான்…
திருமண கோலம் வரும்…
அடடா அன்று முதல்…
ஆனந்த காலம் வரும்…

ஆண் : ஒவ்வொரு இதயத்திலும்…
திருமண ஞாபகங்கள்…
ஆயுள் காலம் வரை…
இருக்கும் ஆனந்தங்கள்…

ஆண் : உறவுகள்தான் என்றும்…
உங்கள் கூட வருமே…
அந்த உறவுகள்தான் வந்தால்…
அந்த வாழ்க்கை சுகமே…

ஆண் : உலகத்தின்…
உலகத்தின் செல்வந்தன் ஆன ஒருவன்…
ஒரு லட்சம் சொந்தங்கள் சேர்த்த மனிதன்…

பெண் : காதல் நெஞ்சமே…
காதல் நெஞ்சமே…
இன்று சேர்ந்திடும்…
அழகிய காதல் நெஞ்சமே…

பெண் : நூறாண்டு சேர்ந்திருக்க…
வாழ்த்தும் நெஞ்சமே…
வாழ்வெல்லாம் சந்தோஷம்…
வந்து கொஞ்சுமே…

பெண் : காதல் நெஞ்சமே…
காதல் நெஞ்சமே…
இன்று சேர்ந்திடும்…
அழகிய காதல் நெஞ்சமே…

பெண் : நூறாண்டு சேர்ந்திருக்க…
வாழ்த்தும் நெஞ்சமே…
வாழ்வெல்லாம் சந்தோஷம்…
வந்து கொஞ்சுமே…

—BGM—


Notes : Manase Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Pa. Vijay. மனசே இள மனசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading