எந்தன் வானின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Yenthen Vanin Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்…
வானம் உள்ளவரை வாழ்க என்றும்…
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை…
வாழ்கவே…

ஆண் : வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்…
வானம் உள்ளவரை வாழ்க என்றும்…
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை…
வாழ்கவே…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
நீயும் வளர்பிறையாக நிலவே… ஏஏ…
நீயும் வளர்பிறையாக நிலவே…
உயிரை தரும் என் காதல் நிலவே நிலவே…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…

BGM

பெண் : திரன திரன தீரன…
திரன திரன தீரன…
திரன திரன தீரன…
திரன திரன தீரன…

ஆண் : வெண்பனி நீ தூங்கிய புல் வெளி நான்…
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்…

ஆண் : வெண்பனி நீ தூங்கிய புல் வெளி நான்…
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்…
மின்னல் கோடி சேர்த்து வைத்தேன் நீ சிரித்த காட்சிகள்…
யாவும் இன்று மாயமாக யாரை கேட்க சாட்சிகள்…

ஆண் : உன்னை எண்ணி வாழ்ந்த காலம்…
கண்கள் ரெண்டும் ஈரமாக…
காதல் ஒன்றும் காயமல்ல…
காலப்போக்கில் ஆறி போக…
நெஞ்சம் எல்லாம் வாழுதே தழும்புகளால்…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…

BGM

ஆண் : என்னை விட்டு போனது அமைதி அன்றோ…
நீயும் இல்லா நானுமே அகதி அன்றோ…
நூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி…
எந்தன் காதல் நீ அறிந்தால் போதும் அந்த ஓர் நொடி…

ஆண் : புல்லின் மீது போகும்போது…
கால் சிவந்த வெண்மை நீ…
கல்லின் மீது நீயும் இங்கு போவதென்ன கண்மணி…
இந்த ஜென்மம் வாழ்வதே உனக்கெனதான்…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
நீயும் வளர்பிறையாக நிலவே…
உயிரை தருவேன் என் காதல் நிலவே நிலவே…

ஆண் : எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…

ஆண் : வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்…
வானம் உள்ளவரை வாழ்க என்றும்…
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை…
வாழ்கவே…

ஆண் : வாழ்க வாழ்கவே வாழ்க நீயும்…
வானம் உள்ளவரை வாழ்க என்றும்…
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை…
வாழ்கவே…


Notes : Yenthen Vanin Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. எந்தன் வானின் பாடல் வரிகள்.