ஆயிரம் நிலவே வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாகே.வி. மகாதேவன்அடிமைப் பெண்

Aayiram Nilave Vaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
இதழோரம் சுவை தேட…
புதுப் பாடல் விழி பாட பாட…

ஆண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
இதழோரம் சுவை தேட…
புதுப் பாடல் விழி பாட பாட…

ஆண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…

—BGM—

ஆண் : நல்லிரவு துணையிருக்க…
நாமிருவர் தனியிருக்க…
நாணமென்ன பாவமென்ன…
நடைதளர்ந்து போனதென்ன…

ஆண் : நல்லிரவு துணையிருக்க…
நாமிருவர் தனியிருக்க…
நாணமென்ன பாவமென்ன…
நடைதளர்ந்து போனதென்ன…

ஆண் : இல்லை உறக்கம்…
ஒரே மனம் என்னாசை பாராயோ…
இல்லை உறக்கம்…
ஒரே மனம் என்னாசை பாராயோ…

ஆண் : என் உயிரிலே உன்னை எழுத…
பொன்மேனி தாராயோ…

ஆண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…

—BGM—

பெண் : மன்னவனின் தோளிரண்டை…
மங்கை எந்தன் கை தழுவ…
கார் குழலும் பாய் விரிக்கும்…
கண் சிவந்து வாய் வெளுக்கும்…

பெண் : மன்னவனின் தோளிரண்டை…
மங்கை எந்தன் கை தழுவ…
கார் குழலும் பாய் விரிக்கும்…
கண் சிவந்து வாய் வெளுக்கும்…

பெண் : இந்த மயக்கம் எழில் முகம்…
முத்தாக வேர்க்காதோ…
இந்த மயக்கம் எழில் முகம்…
முத்தாக வேர்க்காதோ…

பெண் : அந்த நினைவில் வந்து விழுந்தேன்…
கொத்தான பூவாக…

பெண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
இதழோரம் சுவை தேட…
புதுப் பாடல் விழி பாட பாட…

ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…

—BGM—

ஆண் : பொய்கை எனும் நீர்மகளும்…
பூவாடை போர்த்திருந்தாள்…

பெண் : ஆஆ… தென்றல் எனும் காதலனின்…
கை விலக்க வேர்த்து நின்றாள்…

ஆண் : பொய்கை எனும் நீர்மகளும்…
பூவாடை போர்த்திருந்தாள்…

பெண் : ஆஆ… தென்றல் எனும் காதலனின்…
கை விலக்க வேர்த்து நின்றாள்…

ஆண் : என்ன துடிப்போ…
அவள் நிலை நீ உணர மாட்டாயோ…
என்ன துடிப்போ…
அவள் நிலை நீ உணர மாட்டாயோ…

பெண் : அந்த நிலையில்…
ஆண் : அந்த சுகத்தை…
பெண் : நான் உணரக் காட்டாயோ…

ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…
இதழோரம் சுவை தேட…
புதுப் பாடல் விழி பாட பாட…

ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா…
ஓராயிரம் நிலவே வா…


Notes : Aayiram Nilave Vaa Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Pulamaipithan. ஆயிரம் நிலவே வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading