வா வா எந்தன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தர்யன்எஸ். பி. பாலசுப்ரமணியம்சௌந்தர்யன்சேரன் பாண்டியன்

Vaa Vaa Enthan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…

ஆண் : பிரித்தாலும் பிரியாது…
நம் காதல் அழியாது…
வரும் தடைகளை உடைத்திடு…
உறவுக்கு வழி கொடு…

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே…

—BGM—

ஆண் : காணும் கனவெல்லாம் என்றும் நீதானே…
என் கனவெல்லாம் நினைவாக வா வா கண்மணியே…
வீசும் காற்றில் தூசி ஆனேனே…
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே…

ஆண் : நாம் ஒன்று சேரும் திரு நாளும் உருவாகும்…
ஜென்மங்கள் ஏழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது…

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…

—BGM—

ஆண் : காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே…
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே…
தீயாய் உடல் எங்கும் என்னை சுடுகிறதே…
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்கிறதே…

ஆண் : உன்னோடு நாளும் நிழல் ஆக வருவேனே…
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது யாருக்கும் தெரியாது…

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீ தான் நிலவே வெண்ணிலவே…

ஆண் : பிரித்தாலும் பிரியாது…
நம் காதல் அழியாது…
வரும் தடைகளை உடைத்திடு…
உறவுக்கு வழி கொடு…

ஆண் : வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே…
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே…


Notes : Vaa Vaa Enthan Song Lyrics in Tamil. This Song from Cheran Pandian (1991). Song Lyrics penned by Soundaryan. வா வா எந்தன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading