கண்கள் ஒன்றாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தர்யன்மனோ & கே.எஸ். சித்ராசௌந்தர்யன்சேரன் பாண்டியன்

Kangal Ondraga Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…

BGM

ஆண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

BGM

பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…

BGM

ஆண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…
கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

பெண் : வசந்தங்களே வாழ்த்துங்களேன்…
குழு : ஆஆ… ஆஆ…
பெண் : வளர் பிறையாய் வளருங்களேன்…
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…

பெண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

பெண் : மழை வரும்போது குளிர் வரும் கூட…
மலர் மனம் வீசுமே…
இவள் மனம் உந்தன் வருகையை கண்டு…
எழில் முகம் பூக்குமே…

ஆண் : அடித்திடும் கைகள் அணைத்திட நானும்…
அடைக்கலம் ஆகிறேன்…
முல்லையே எல்லை இல்லையே…
உந்தன் அன்பினில் மூழ்கினேன்…

பெண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM

ஆண் : ஒருகணம் பார்க்க பலக்கணம் நெஞ்சில்…
திரைப்படம் பார்க்கிறேன்…
உயிருடன் நித்தம் உரசியே…
என்றும் உன்வசம் கலக்கிறேன்…

பெண் : பிரிவதும் பின்பு இணைவதும்…
நதிகளின் அலைகளும் கரையுமா… ஆஆ…
பெண்மைதான் தூங்கவில்லையே…
உந்தன் பித்துதான் அதிகமா…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

ஆண் : ஓ வசந்தங்களே வாழ்த்துங்களேன்…
குழு : ஆஆ ஆஆ…
பெண் : வளர் பிறையாய் வளருங்களேன்…
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : கண்கள் ஒன்றாக கலந்ததால்…
பெண் : காதல் திருக்கோலம் கொண்டதோ…

ஆண் : கைகள் ஒன்றாக இணைந்ததால்…
பெண் : கவிதை பல பாட மலர்ந்ததோ…

BGM


Notes : Kangal Ondraga Song Lyrics in Tamil. This Song from Cheran Pandian (1991). Song Lyrics penned by Soundaryan. கண்கள் ஒன்றாக பாடல் வரிகள்.


Scroll to Top